கவிஞன் ஒரு விஞ்ஞானி
கவிஞன் ஒரு விஞ்ஞானி
வேலை வேறென்ன செய்வான்!!
வேலையே எழுதுவதுதான்!!
வெட்டியான் என்றே நகைத்தாலும்
வெக்கமவனில் விளையாது.
எமக்குத் தொழில் கவிதை
என்று பாரதி அன்றதை
பெருமையாகச் சொன்னானே.
வறுமை வாடலிலும்!
எழுதுவதென்பது வெறும்
பொழுது போக்கல்ல.
உழுபவன் படும் பாடென
உணர்வரோ உலகார் !
பழுதுபடாது அஞ்சி அஞ்சி
படைப்பதென்பதும் எளிதோ!
உழுது உழுது தரிசு செழிப்பதும்
எழுதும் ஏரது உழைப்போ!
கவிஞனொரு தாயுமானவன்
கவிதையொன்றில் கூறினேன்
பிரசவிக்கும் வேதனையறிவான்.
பேசாதீர் கேலியும்!
ஓலையும் தாளும் கடந்து
அலையும் காற்றில் எழுது
எனக்காலம் மாறினாலும்
எழுத்து ஓயவில்லை!
அருமையடைந்த கவிஞர்களும்
வறுமைக்குத்தானே உறவாகினர்.
ஆனாலும் உலகம் உய்ய அவரின்
ஆணிசாயவில்லையே!
கவிஞனவனோ விஞ்ஞானியே!
காலமுகந்த கருத்தாய்ந்தே
புவிக்குச்சொல்வான் புதுமையே!
புரியுமுலகு வாழ்கவே!
கொ.பெ.பி.அய்யா..