உள்ளம் என்பது என்ன

உள்ளம் என்பது என்ன

பாடுகிறேன் பாடுகிறேன்
பாட்டொண்ணு பாடுகிறேன்.
தேடுகிறேன் தேடுகிறேன்
தெய்வத்தையே தேடுகிறேன்.

இருக்கிறானோ இல்லையோ
இருந்தாலவன் நல்லதே!
காட்டென்றால் ஆகுமோ?
காற்றைக்காணக் கூடுமோ!

கண்ணாடி அறியாத
காலமதில் மனிதனோ!
தண்ணீரில் தன்னையே
தானே கண்டறிந்தானோ!

உன்னை நீ அறிவதற்கோ
கண்ணாடி தேவையெனில்!
இறைவனை உணர்வதற்கு
என்ன தேவை தேடினோமோ?

இதயம் என்றால் என்னவோ?
இரத்தம் செய்யும் கருவிதானோ?
உள்ளம் அது எங்கேயோ!
உணர்ந்தோமோ !தெளிந்தோமோ!

எங்கெங்கோ தேடுகிறோம்!
தங்குமுள்ளம் மறந்துவிட்டோம்!
உள்ளத்தில் இருப்பவனை
உணரும் வழி தவறிவிட்டோம் !

உணர்ந்திடும் உபாயமோ
உள்நினைந்து தேடுவதே!
உள்ள உள்ள உள் வருவான்..
உள்ளமே அவன் வாசம்!!

உயிரென்றால் என்னவென்றும்
உள்ள இடம் எதுவென்றும்
இதுவரையும் புரியாமலும்
இறைவனை நாம் தேடுகிறோம் ..

காணக்கிடையா மாயனவன்!
காணா நிறைத் தூயனவன்!
கண்டுவிட்டால் பக்தியில்லை!
அண்டிவிட்டால் பயமுமில்லை!

சுத்த சன் மார்க்கமதை
நித்தியம் பழகிடவே!
சுத்தமாகும் சித்தமே!
சத்தமின்றி உள் அமர்வான்!.

உள்ளிருக்கும் கோவிலது
உள்ளமே என உணர்க!
பொல்லாத நாசங்களை
வெல்ல ஆகும் அவன் வரவு.!

ஜோதியாய் நிறைந்திடுவான்!
நீதியாய் உறைந்திடுவான்!
ஆதியாய் மலர்ந்திடுவான்!
நாதியாய் கலந்திடுவான்!

இயங்குவது உண்மையானால்
இயக்கும் விசை ஆய்ந்தோமோ!
அறிவியல்தான் அதுவென்றால்
அது அவனே இறையென்போம்!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : (18-Mar-15, 10:08 am)
பார்வை : 87

மேலே