தாயின் தவிப்பு

தாயின் தவிப்பு

ஏனழுதாய் ஏனழுதாய்
இளவஞ்சி ஏனழுதாய்!
நானழுது ஓயுமுன்னே
ஏனழுதாய் என் மகளே!

கொத்தனாரோ மிரட்டுகிறான்
ஒத்தை என்னை அழைக்கிறான்
நாளை வேலை அச்சாரமாய்
நான் போக வேண்டுமடி!!

குடிகாரன் உன் தகப்பன்
கொலைகாரன் தன்னைக் கொன்றான்.
தாலியுள்ள விதவை நான்
வேலிதாண்டி வாழுகிறேன்.

உன்னை நான் வளர்ப்பதற்கு
என்னை நான் இழந்தேனே.
பெண்ணாய் நீ சிறப்பதற்கு.
மண்ணாகிச்சிதைந்தேனே

நீ வளர்ந்து மங்கையாகி
நிலம் போற்றும் அன்னையாகி!
நான் வாழ்ந்த விதம் மறைய
நலம் வாழக் கண்ணுறங்கு.

சந்திரனும் சூரியனும்
சாட்சியடி சண்டாளிக்கு
விடிந்தாலும் அடைந்தாலும்
விடையேது தாயெனக்கு?

கொ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (18-Mar-15, 10:02 am)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
Tanglish : thaayin thavippu
பார்வை : 316

மேலே