மன வறட்சி

பறிப்பாரில்லை
வாடி கிடக்குது கொடிமலர்
படிப்பாரில்லை
அடுக்கிக் கிடக்குது புத்தகங்கள்
ரசிப்பாரில்லை
வானத்தில் வெண்ணிலவு
மகிழ்வாரில்லை
வீசுது தென்றல் காற்று
நடப்பாரில்லை
வெறிச்சுக் கிடக்குது வீதி
மனிதனுக்கு மன வறட்சி
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Mar-15, 3:33 pm)
Tanglish : mana varatchi
பார்வை : 102

மேலே