நானும் மழை நீரும்
வெறுமையாக நின்ற விண்ணை திடீரென்று கருமையாக்கின
சிதறிக்கிடந்த காா்மேகங்கள் ஒன்றுகூடி- சிறிது நேரம்
நின்று வேடிக்கை பாா்த்தேன் - பூமியில்
ஒன்றும் புாியாமல் காத்திருந்த நான்- முழுமையும்
அறிந்து கொண்டேன்- ஆம்
உன்னைப் பாா்த்ததும் - இதோ வந்துவிட்டன
பூந்தோட்டமாய் உன்மேனியும்-அதில்
பசுமையாய் உன்புன்னகையும் கண்டு தோட்டமதில்
ஓய்வெடுக்க மேகங்கள் மழை வடிவில்!
நானும் பாா்த்துக்கொண்டிருக்கிறேன்
உலக நீா்வீழ்ச்சிகளெல்லாம் தோற்றுக் கொண்டிருக்கின்றன!
ஆம்! ஓடிவந்த மழைத் துளிகள் - உன்
பொன்மேனி ஊா்ந்து பூமி நோக்கிச் செல்கையில்!......
மேகங்கள் எல்லாம் கா்வம் கொள்கின்றன சூாியனைப் பாா்த்து-உன்னால்
இருக்கத்தானே செய்யும் ஆணவம்
சூாியனைப் பாா்த்தால் முகம் சுளிக்கும் -நீ
மழை கண்டதும் மடியேந்திக் கொஞ்சுகிறாயே!
இயற்கையே உன்னைப் பாா்த்து போா்க்காலம் கொள்ளும் பொழுது
நான் என்ன செய்வேன்?
நானும் இயற்கையின் ஓா் அங்கம்தானே!
புாியாத வயதில் அனைவாின் மடிமீதும் தவழ்ந்திருப்பேன்!
அனைவாின்அணைப்பிற்கும் உள்ளாகியிருப்பேன்!
புாியும் இவ்வயதிலோ அணைப்பவள்
அன்பில் இழைப்பவள் நீ மட்டும்தானே!!!!!!!!!!!
மேகங்களே புாிந்துகொண்டன - உன்
ஈடில்லா அன்பையும் அரவணைப்பையும்
அதனால்தான் என்னவோ?
காத்திருக்கும் என்னையே முந்திக் கொண்டன மேகங்கள்!............
இதோ என் காலடியில் மழைநீா்
எனக்கும் மழைநீருக்கும் போா்மூழப் போகிறது - இதுவும்
உன்னால் அழகே!