வெற்று வானம் ~~~ ஆதர்ஷ்ஜி

வெற்று வானம்
~~~~~~~~~~~~~

குருவிக் கூட்டமொன்று சடசடத்து வானில் பறக்க,
குழந்தையொன்று அண்ணாந்து வானம் பார்க்கிறது...!

இரை தேடிச் செல்வதாய் சொல்லப்பட்டது குழந்தைக்கு.

வழக்கமான பதில்தான்.

ஆனால் அலைபேசி கோபுரங்களின் அதிர்வு தாங்காது,
குருவிகள் இடம் பெயர்வது,
குழந்தைக்குப் புரிய வாய்ப்பில்லை!

குழந்தையைப் பெற்றவர்களுக்கும் கூட!

கோபுரங்கள் துரத்தத் துரத்த
குருவிகள் இடம்பெயர்ந்து கொண்டேயிருந்தன....
கூட்டம் கூட்டமாய்...!!
அலைபேசி கோபுரங்கள் இல்லாத இடம் தேடி!

நகர்விட்டு ஊர்ப்புறம்
ஊர்விட்டு கிராமம்
கிராமம்விட்டு குக்கிராமம் இப்படி.
இனி போக மிச்சமிருப்பது
வேற்றுக் கிரகங்கள் மட்டும்தான்...

குருவிக் கூட்டம் திரும்பி வருமென்று
வானம் பார்த்துக் காத்திருந்த குழந்தைக்கு வயதாகிவிட்டது.

அதன்பின் பிறந்த குழந்தைகளுக்கு
குருவிகள் என்றால் என்னவென்றே புரியாமல் போயிற்று!
                            ~ ஆதர்ஷ்ஜி
~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் இதயத்தில் கூடு கட்டிக் குடியிருக்கும் குருவிகளுக்கு காணிக்கை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
(மார்ச் 20 ஆம் தேதி... சிட்டுக்குருவிகள் தினம்)

எழுதியவர் : ஆதர்ஷ்ஜி (20-Mar-15, 4:00 am)
பார்வை : 810

மேலே