புலரும் பொழுது

உலவும் நிலவின் உருவம் மறைத்து
உலகின் இருளை உதைத்து விரட்டி
மலரின் இதழ்போல் மனதும் விரிய
புலரும் பொழுதின் புதினம் வரமே !

நுனிப்புல் தனிலே நுடங்கும் குளிரில்
பனித்துளி தூங்க படுக்கை விரித்து
மனிதன் அறியா மகத்துவத் தோடு
புனிதமாய் காலை புலர்தல் மகிழ்வே!

புல்லினம் கூட்டில் புதிதாய் எழுதிய
மெல்லிசை தன்னை மெதுவாய் இசைத்திட
பல்லின மக்கள் பரவசம் கொண்டிட
மல்லிகை பூவாய் மனதை மயக்குமே!

கிழக்கு வெழுத்து கிரணம் அரும்பும்
பழக்கம் மறவா பகலவன் சேவை
வழங்கி மகிழும் வசந்த நிகழ்வின்
அழகில் மயங்கின் அமைதி மலருமே!

(நான்கு சீரடி கட்டளைக் கலிப்பா
12 எழுத்துக்கள் கொண்டவை)

**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (20-Mar-15, 3:46 am)
Tanglish : pularum pozhuthu
பார்வை : 637

மேலே