எதில் இல்லை குறை?

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

*எதில் இல்லை குறை?*

படைப்பு : *கவிதை ரசிகன்*
குமரேசன்

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

உடல் அழகான மயிலுக்கு
குரல் கரகரப்பானது
குரல் இனிமையான குயிலுக்கு
உடல் கருப்பானது....

குளிர்ச்சியான நிலவுக்கு
ஆற்றல் இல்லை
ஆற்றல் உள்ள சூரியனுக்கு
குளிர்ச்சி இல்லை

வலிமையான
பொருளுக்கு
மென்மை இல்லை
மென்மையான பொருளுக்கு
வலிமை இல்லை

இருள்
இருக்கும் இடத்தில்
ஒளி இருப்பதில்லை
ஔி இருக்கும் இடத்தில்
இருள் இருப்பதில்லை

உணவு இருப்பவரிடம்
பசி இருப்பதில்லை
பசி இருப்பவரிடம்
உணவு இருப்பதில்லை

பணம் இருப்பவரிடம்
குணம் இருப்பதில்லை
குணம் இருப்பவரிடம்
பணம் இருப்பதில்லை

படிப்பு உள்ளவரிடம்
பண்பு இருப்பதில்லை
பண்பு உள்ளவரிடம்
படிப்பு இருப்பதில்லை

நேர்மை இருப்பவர்களிடம்
அதிகாரம் இல்லை
அதிகாரம் இருப்பவர்களிடம்
நேர்மை இருப்பதில்லை

வசதி உள்ளவர்களிடம்
நிம்மதி இல்லை
நிம்மதி உள்ளவர்களிடம்
வசதியில்லை

அது இருந்தால்
இது இல்லை
இது இருந்தால்
அது இல்லை
எல்லாம் இருந்தால்
வாழ்க்கையில்
சுவாரசியமே இருக்காது...

இனியாவது
குறை ஒன்று
உன்னிடம் இருந்தால்
கவலைப்படாதே
அதை களைய முயற்சி செய் !
ஆயினும்
அடுத்த குறை
உன்னில் முளைக்கும்
தயாராக இரு....

'குறை'தான்
வாழ்க்கையை
'நிறை'யாக்குகிறது....!!!

*கவிதை ரசிகன்*

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

எழுதியவர் : கவிதை ரசிகன் (7-Jul-24, 7:50 pm)
பார்வை : 50

மேலே