இதமான நிமிடங்கள் தாத்தாவுடன் -சகி

மறவா நினைவுகள் .....
கதிரவன் மறையும்
மாலை நேரம் ....
பணிநேரம் முடிந்து வீட்டிற்கு
கிளப்பும் நேரம் ....
ஏதோதோ எண்ணங்களுடன்
நடைபோட அன்று மாலை....
பாதையில் கோவில் ஒன்றில்
கைப்பிடி குச்சியுடன் தாத்தா
வானொலி பெட்டி ஒன்றில்
செய்தி கேட்டுக்கொண்டிருக்க ...
சிறு புன்னகையை பாசமுடன்
அன்பளித்தார் எனக்கு ....
நானும் பதிலுக்கு புன்னகைக்க
பழகிய உறவு போல் உரையாடினார் ....
தன் உறவுகளை பற்றி
முழு மனநிறைவுடன் சொல்லிமுடித்தார் ...
அவர் முகமும் மனமும் முழுவதுமே
சந்தோசத்தை உணர்ந்தேன் ...
முழுவதுமே கேட்டுவிட்டு நகர்ந்தேன் ...
முதியவர்களுக்கு தன் மனதில்
உள்ள சந்தோசங்களை பகிர
பேரன் பேத்திகள் அருகில்
இல்லை என்பது எவ்வளவு
துன்பம் என்பதை உணர்தேன் ....
என் மனமும் ஏனோ
இலேசானது தாத்தாவிடம்
பேசிவிட்டு நகர ....
தினம் தினம் ஒரு சில
நிமிடங்களை மாலை நேரம்
தாத்தாவுடன் பேசிக்கொண்டே
கழித்து விட்டு வருகிறேன்.....
என் மனமும் சலனமின்றி
சந்தோசத்தில் நிறைகிறது ...
(மற்றவரின் இன்ப துன்பங்களை உணர்த்து
நடந்தால் நாமும் சந்தோசமாக வாழலாம்
ஒரு சின்ன மறக்க முடிய அனுபவம் )