நட்பென்றால்

நட்புக்குள்
நிறங்கள் அழகு!
நட்புக்குள்
குறும்பும் அழகு!
நட்புக்குள்
எண்ணங்கள் அழகு!
நட்புக்குள்
எதிர்ப்பார்ப்புகள் அழகு!
நட்புக்குள்
வம்பும் அழகு!
அன்பும் அழகு!
நட்புக்குள்
ஆணவமும் அழகு!
நட்புக்குள்
அப்பாவித்தனமும் அழகு!
நட்புக்குள்
புன்னகையும் அழகு!
நட்புக்குள்
அழுகையும் அழகு!
நட்புக்குள்
நிலையாக எதுவும்
நீடிப்பதில்லை
அதனால்
உணர்வுகள் எல்லாவற்றினும்
உற்சாக வடிவம் மட்டுமே
உறுதியாய் நிற்கும்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (21-Mar-15, 8:50 pm)
பார்வை : 717

மேலே