மீண்டும் வா மீண்டு வர
காற்றடித்தால் நில்லாத
மேகம்..
கண்ணீருடன் கலந்து
போகும்..
காரணம் காதல்
தாகம்..
உன் பிரிவில் என் பயணம்
தலைமேல் மழை
தரைமேல் பாதம்...
அழகே என்
ஆவியினுள்ளே
மீண்டும் வா மீண்டு வர...
நான் மட்டும் அல்ல
சிந்திய மழையும்
ஆவியாகி மேகமாக...
செ.மணி