காதல் மறந்த கவிஞன்

நெருஞ்சி முள்ளாய்
நெஞ்சைக் குத்துதடி
குறிஞ்சி முல்லைக்
கண்டு கண் வைத்த
நம் காதலை இன்று
ஊர் சொல்லைக் கேட்டு
நான் உதறிவிட்டதால்...

தேரோடும் தெருவில்
ஊரோடும் பொழுது
நான் மட்டும் தனியே
ஊரோரம் நிற்கும்
புளிய மர நிழலில்
உட்கார்ந்து உன்
நிலமைப் பற்றி
நினைக்கின்றேன்...

ஊருக்காக உன்னை
இழந்த நான்
யாருக்காக வாழ
வேண்டுமென்று...

"உண்மைக் காதலை
உதறி விடாதே ஒருபோதும்
உலகே சொன்னாலும்
உன்னுயிரேப் போனாலும்"...


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (20-Mar-15, 1:09 pm)
பார்வை : 370

மேலே