எனது கேள்விகள்

மறப்பது பெண்மை இயல்போடி ?
இவன் இறந்து வாழ்வது தெரியுமோடி ?
நான் கண்டவையனைத்தும் கனவோடி ?
கனவன்று எனநீயுரைத்தது பொய்யோடி ?
உனைக்கண்ட நேரம் எனைதொலைத்தேனடி!
எனை நீ கொன்றது தெரிந்தும் விரும்புகிறேனடி!
இதயம் கிழிந்தும் கண்ணீர் வரவில்லை ஏனடி ?
கண்களையும் பறித்து சென்றயோடி?
உன் கண்ணீர் துடைக்க என்கை உயர்ந்ததேனடி ?
அதுவே என் காதலை நான் உணர்ந்த தருணமடி !
உன்னுடன் உணவருந்தும் ஒருவரம் கேட்டேனடி !
நீராசையென்று செய்கையில் சொன்னாயடி !
பிரிவோம் என்றோர் கடுஞ்சொல் சொன்னாயடி
சுடுசோறும் உள்ளே இறங்க மறுக்குதடி !
எனை பெற்றவள் கேட்கிறாள் என்னபதில் உரைப்பேனடி ?

எழுதியவர் : கிருஷ்ணா (21-Mar-15, 7:16 pm)
பார்வை : 565

மேலே