வேலை இல்லா பட்டதாரி

வீண் பொருள் ஆனவனாய்
விவாதிக்க தெரியாதவனாய்
விழுங்கிய வார்த்தையுடன்
மழுங்கி கிடப்பவர்களின் ஒருவன்
நான்..
சமூகத்திற்கு சோறு போடா அசைபடுபவன்
சமூகம் சோறு போட விக்கி விழுங்குபவன்
சாலையோர பூக்கள் போல்
வீண்ணடிக்க பட்ட வாசத்துடன்
நான்....
இதோ புறப்பட்டு விட்டேன்
என் தோணி தயாராகி விட்டது
அனுபவம் துடுப்பகி அலைகோத
துணிந்தவன் நான் துணை போக
காண்....

வேலை இல்லா பட்டதாரி ...!

எழுதியவர் : தா சுஜிமோன் (22-Mar-15, 4:08 pm)
பார்வை : 151

மேலே