உலக தண்ணீர் தினம் - மார்ச் 22

மரங்களை
அறுத்தெறிந்து
நெகிழி பைகளால்
தூக்கிலிட்டு
வேதி பொருளால்
நஞ்சு ஊட்டி
தெரு பம்புகளில்
வீணடித்து
அழிந்து வருகிறேன் நான்

***********************
நிச்சயம்
ஒருநாள் வரும்
பணத்தை
தண்ணீராய் செலவழிக்காதீர்
என்ற நிலை மாறி
பணத்தை
தண்ணீரை செலவழி
என்ற பழமொழி உருவாகும்

*************************

நிச்சயம்
இன்னொரு நாள் வரும்
பல கோடி கொடுத்தாலும்
ஒரு குவளை
தண்ணீர் கூட கிடைக்காது

************************

ஒரு சொட்டு
தண்ணீருக்கே
கண்ணீர் சொட்டுகளே
வராமலும்
பிச்சை கேட்க வேண்டிருக்கும்

*************************

தாகத்தால்
தன் சிறுநீரை கூட
குடிக்க மனம் தூண்டும்
ஆனால்
சிறுநீருக்கும்
அங்கு வழி இருக்காது

************************

ஒன்றும் முடியாமல்
அடுத்தவர் நெற்றியில்
வடியும் வியர்வை துளிகளை
நக்கி கொண்டே
நாவினை நனைத்துக்கொண்டிருக்கும்
உயிரை விடவே மனம்
கனைத்துக் கொண்டிருக்கும்


************************

இல்லை இல்லை
வேண்டாம் இக்கொடுமை
நம் சந்ததிகள்
நலமாய் வாழ்ந்திட
தண்ணீரை பாதுகாப்போம்
தாக கண்ணீரை துடைப்போம்

எழுதியவர் : கவிபுத்திரன் (22-Mar-15, 6:20 pm)
பார்வை : 167

மேலே