தாய்

தாய்..
பூமிப்பந்தை சுத்தவைக்கும் புண்ணியமே
புகலவந்தேன் உந்தன் பெருமை இந்த அவையிலே!
கருவறையில் உயிர் வளர்த்த கற்பகமே
கண் இமை போல் எனை வளர்த்த காவியமே!

அன்னை கொண்ட பெருமையினால்
அகிலம் வாழுது-
ஆறுதலாய் நீ இருக்க
சோர்வும் மாறுது!

ஆராரோ பாடினாக்க
உலகம் உறங்குது –
தாலாட்டு கேட்டாலே
பசியும் நீங்குது!

மண்ணில் உள்ள உயிர் அனைத்தும்
அன்னையினாலே!
மாண்புடனே போற்றிடுவோம்
அவர் புகழினையே!

மனதில் பாரம் அழுத்தும் போது
சுமைதாங்கி !
மக்களுக்கு கொடுமை என்றால்
வீர பெண்மணி !

எந்த துன்பம் வந்த போதும்
ஏற்றிடுவாயே!
எங்கள் குறை எல்லாவற்றையும்
பொறுத்திடுவாயே!

இனிய தென்றல் காற்று-
மகவை அணைக்கும் அன்னையின் சுவாசக்காற்று!
இனிக்கும் இன்சுவை நறுந்தேன்-
பசித்திடும் குழந்தைக்கு புகட்டிடும் தாய்ப்பாலே!

கவிபாடும் குயிலின் தேவ கானம்-
தேமதுர குரலினிலே நீ தாலாட்டும் கீதம்!
கிழக்கு கடலின் சூரிய உதயம்-
கலையான முகத்துடனே நீ துயிலெழுப்பும் நேரம்!

மேகம் வருடும் பசும்பொன் மலை-
கேசத்தை கோதிடும் நின் விரல் ஸ்பரிசம்!
ரோஜா தோட்டத்தின் சுந்தர வாசம்-
வியர்வையில் குளித்து நீ காட்டிடும் பாசம்!

சாமி படைத்த சாமி நீ
ஆஸ்க்கார் அவார்டெல்லாம் உனக்கு தூசி

எழுதியவர் : சோ.சுப்பிரமணி , குவைத் . (22-Mar-15, 6:05 pm)
சேர்த்தது : சோசுப்பிரமணி
Tanglish : thaay
பார்வை : 303

சிறந்த கவிதைகள்

மேலே