பெண் பூக்கள்
வண்ண வண்ண பூக்களாம்;
வாசனை உள்ள பூக்களாம்;
பட்டு போன்ற இதழ்களாம்;
மௌனம் தான் மொழிகளாம்;
நன்மை பல தருவனவாம்;
இரக்கம் உள்ள குணங்களாம்;
மகிழ செய்யும் குழந்தையாம்;
எதையும் தாங்கும் இதயமாம்;
அரும்பு எனும் பேதையாம்;
மொட்டு எனும் பெதும்பையாம்;
மலரும் இளம் மங்கையாம்;
அலர்ந்த பேர்இளம்-பெண் பூக்களாம்;
நன்மை நீயும் செய்தாலே;
பயமும் இல்லை அதனாலே;
தீங்கு செய்ய நினைத்தாலே;
நீயும் சாவாய் முள்ளாலே...!!!