சக்தி ஸ்ரீ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சக்தி ஸ்ரீ |
இடம் | : இராஜபாளையம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 239 |
புள்ளி | : 51 |
பட்டய கணக்காளர் ஆக முயற்சித்து கொண்டிருக்கும் நல்வேளையில்;
தமிழின் மீது ஆர்வம் கொண்ட தமிழச்சியாய்;
பள்ளிக்கு பின் தமிழை தொடர வழி கொடுத்திருக்கும் எழுத்து வலைதளத்தில்
விரும்பி இணைந்து சுதந்திரமாய் சுற்றிவரும் சுட்டிப்பெண்...!
உனது விழிகளின் வீணையில்
இமைகள் இசை மீட்டுகிறது...
உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம்
என்னை விட காகிதமே
அதிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறது...
பூக்களைப் போல நீ இல்லை
எல்லா பூக்களும்
உன்னைப் போலவே இருக்கின்றன...
மௌனம் கூட அழகாகிறது
நீ உறங்கும் பொழுது...
உன் இதழ் தொட்டதும்
வெட்கத்தில் சிவந்து
ஒரு மடங்கு சிவப்பு அதிகமானது
உதட்டுச் சாயத்திற்கு...
இதுவரை இசையென்று இருந்ததெல்லாம்
இல்லாமல் போகிறது
உன் கொலுசு சத்தத்தில்...
நீ
வெளியில் வராதே
வெயில் வேடிக்கைப் பார்க்கிறது...
உன் பாத சுவடுகளை
அழிக்க மனமில்லாமல்
அலைபாய்கிறது அலைகள் கூட...
நீ
கண்காட்சிக்கு செல்லும்ப
இன்றெனக்கு திருமணமாம்
என்னருகினில் மிக நெருக்கமாய்
என்னவன் முதல்முறையாக
என் விரல் பற்றிக்கொண்டு ...
அதிகமாய் வெட்கத்தில்
முகம் சிவந்துள்ளதென
காதருகினில் மெல்ல
கிசுகிசுத்தானவன்
காதலித்தவனையே
கரம்பிடிக்கிறேனின்று
கடும்போரட்டத்திற்குப்பின்
பெற்றோரின் முழுஆசியுடன் ..
** எவ்வாறு...
** என்வாழ்வில்
** வந்தானென்று
** நினைவில்லையெனக்கு
** சககல்லூரி தோழனாய்
** சரியானதொரு மழைப்பொழுதில்
** என் கண்ணில் விழுந்தானவன் ...
** நானும்
**அவனும்
** முழுவதும்
** நனைந்திருந்தோம்
** மழையிலன்று...
கெட்டிமேளம்
கெட்டிமேளம்
சப்தங்கள் ஒலிக்கிறது
சங்கீதமாய் செவிகளுள
மேகப்பெண்
சிரிக்கிறாள்
நிசமாகவே
உதிர்கிறது
முத்துக்கள் காண்.
பச்சை வண்ண
பியானோ பொத்தான்கள்
தென்னங்கீற்றுகள்.
இசைக்கிறது
அத்துளிகள் காண்.
குட்டிக் குழந்தை
கைத்தட்டி இரசிக்கிறது.
வாசலில் நடனமாடும்
சிதறலைக் காண்.
சன்னல் கம்பிகளில்
தோரணமாய் மாறிய
ஒளி ஊடுறுவும்
இலைகளைக் காண்.
மைனஸ் டிகிரி சூட்டால்
கொப்புளங்கள் வருமோ?
தேங்கு நீரில் வீங்கும்
நீ்ர்க்குமிழ் காண்.
உஸ்ஸ் என்ற
சத்தத்தில்
அணைக்கிறது
கவலைக் கங்கினை.
காண்.
சாய்வுக்
கூரை வழியே
சந்தோசமது
வாசல் முற்றத்தில்
விழுகிறது காண்.
கூட்டமெல்லாம்
விலகி நிற்க
கம்பீரமாய் நடந்துவரும்
துளி இராஜாக்கள் காண்.
சூரியன் ……!
இதுவரை வேலை நிறுத்தம்
செய்யாத முதல் தொழிலாளி ……!
பூமி ……!
இன்னும் விளையாட்டுப்பிள்ளை
தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறாள் ……!
நிலவு ……!
கண்ணாமூச்சு ஆட்டத்திற்குச் சொந்தக்காரன்
மாதத்திற்கு பாதிநாள் ஒளிந்தே விளையாடுவான்……!
கொடுத்த வாக்கு பொய்த்தபின் உள்ள மனம்;
........... அனுபவித்தால் மட்டுமே உணரக்கூடிய வலி...!
வண்ண வண்ண பூக்களாம்;
வாசனை உள்ள பூக்களாம்;
பட்டு போன்ற இதழ்களாம்;
மௌனம் தான் மொழிகளாம்;
நன்மை பல தருவனவாம்;
இரக்கம் உள்ள குணங்களாம்;
மகிழ செய்யும் குழந்தையாம்;
எதையும் தாங்கும் இதயமாம்;
அரும்பு எனும் பேதையாம்;
மொட்டு எனும் பெதும்பையாம்;
மலரும் இளம் மங்கையாம்;
அலர்ந்த பேர்இளம்-பெண் பூக்களாம்;
நன்மை நீயும் செய்தாலே;
பயமும் இல்லை அதனாலே;
தீங்கு செய்ய நினைத்தாலே;
நீயும் சாவாய் முள்ளாலே...!!!
ஒரு ஆண் ஒரு பெண்ணை நேசிக்கிறான் என்பதை எதை கொண்டு அறிந்துகொள்வது?
எப்பொழுது நம்பிக்கை வரும்?
தேவைப்படும்போது கிடைக்காத ஒருவரின் ஆறுதல்;
காலம் கடந்து கிடைப்பதால், பயனில்லை...!