கனவில் மழை வந்து எழுதச் சொன்னது

மேகப்பெண்
சிரிக்கிறாள்
நிசமாகவே
உதிர்கிறது
முத்துக்கள் காண்.

பச்சை வண்ண
பியானோ பொத்தான்கள்
தென்னங்கீற்றுகள்.
இசைக்கிறது
அத்துளிகள் காண்.

குட்டிக் குழந்தை
கைத்தட்டி இரசிக்கிறது.
வாசலில் நடனமாடும்
சிதறலைக் காண்.

சன்னல் கம்பிகளில்
தோரணமாய் மாறிய
ஒளி ஊடுறுவும்
இலைகளைக் காண்.

மைனஸ் டிகிரி சூட்டால்
கொப்புளங்கள் வருமோ?
தேங்கு நீரில் வீங்கும்
நீ்ர்க்குமிழ் காண்.

உஸ்ஸ் என்ற
சத்தத்தில்
அணைக்கிறது
கவலைக் கங்கினை.
காண்.

சாய்வுக்
கூரை வழியே
சந்தோசமது
வாசல் முற்றத்தில்
விழுகிறது காண்.

கூட்டமெல்லாம்
விலகி நிற்க
கம்பீரமாய் நடந்துவரும்
துளி இராஜாக்கள் காண்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (12-Apr-15, 9:30 pm)
பார்வை : 149

மேலே