சுதந்திரம்
பட்டொளி வீசிடும் பாரதக் கொடியை- தலைநகரில்
பயமின்றி ஏற்றிடும் நாளும் எந்த நாளோ...?
இலட்சமாய் வீரர்கள் படைசூழ்ந்திட – கூண்டிலே நின்று
கொடியை ஏற்றுவதுவும் சுதந்திர நாளோ..?
இனிய சுதந்திரம் வேண்டிடுவோம் – என்றும்
இம்மண்ணின் மகிமை போற்றிடுவோம்!
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம் – அகிலத்தில்
நம்தேசத்தின் பெருமை காத்திடுவோம் !
எல்லைகள் மீறியே சீண்டிடும் சதியெல்லாம் – மக்களை
தொட்டு விடாமல் தோழமை கொள்வோம் !
புண்ணிய பாரதம் நம் அன்னை பாரதம் –பூமியில்
நாளும் செழித்திட உறுதி பூணுவோம்!
சோ.சுப்பிரமணி , குவைத்.
22-03-2015