சுபா

வழுக்கியே விழுகிறது..
ஒவ்வொரு முறையும்
இந்த எழுது கோல்..
நிற்கவும் வலுவின்றி..!

காய்ந்தே போகின்றது
இதில் உள்ள மை எல்லாம் ..
எண்ணியதை எழுத
முனையும் முன்பே ..!

எரிந்தே போகிறது
இந்தக் காகிதமும்கூட ..
எண்ணத்தைப் பதிவு செய்யத்
துணிந்த உடனே..!

எந்தவொரு சலனமின்றி..
எப்படியடி சொல்லிச் சென்றாய்..
என்னை மறந்து விடு
என்று..!

ஓ..உன் பெயரின்
பொருளை உணர்த்தி
சென்றாயோ..அடியே
மங்களா..!

எழுதியவர் : கருணா (23-Mar-15, 9:25 am)
பார்வை : 448

மேலே