ஒரு சொல்
மனதை வருடும் ஒரு எண்ணம்
நினைவைத் திருடும் ஒரு ஸ்பரிசம் ....
கனவில் மிதக்கும் ஒரு வடிவம்
கன்னம் சிவக்க சில வார்த்தை ....
ஓர விழியில் ஒரு பார்வை
கள்ளச் சிரிப்பில் ஒரு செய்தி ...
உள்ளம் மயக்கும் ஒரு உரசல்
தெள்ளத் தெளிவாய் மனம் சொல்லும்
காலம் முழுதும் மனம் பொங்க
உயிரை உருக்கும் அது காதல் ...!
--- செல்லம் ரகு.