தூக்குமேடை கருவுற்றது-எதிரிகள் முளைத்து விட்டார்கள் எழுந்திடுங்கள்

தூக்குமேடை கருவுற்றது...
எதிரிகள் முளைத்துவிட்டார்கள்
எழுந்திடுங்கள்.......

வெம்மை நிலத்தில் வீழ்ந்தவன், 
பொம்மைவீரனே! 
பொம்மைச்சுதந்திரம் பார்த்தெழுந்தவன் உண்மை வீரனே! 

உயிர்த்துஎழுவாய் நீ! 
மீண்டும் உயிர்த்து எழுவாய்! 
உன் தேசத்தின் எல்லையைமுறிக்கும், 
எதிரியின் எலும்பை முறிக்க, 
எமனின்மழுவாய் நீ 
மீண்டும் உயிர்த்துஎழுவாய்! 

வந்தவனெல்லாம் வழிப்பறி நடத்த, தேசம் வாய்ப்பொறி அல்ல! 
ஆகட்டும்! மீண்டும் ஆகட்டும்! 
சடலத்தின் சபதங்கள்,
மீண்டும் ஜனனம் ஆகட்டும்! 

கருவறைசத்தங்கள்,
 மீண்டும், கல்லறையை பிளக்கட்டும்! 
விரோதமும் குரோதமும் மீண்டும் விரக்தி ஆகட்டும்! 
பசிதமும் சாரமும், 
உயிர் ஆயுதத்தில் உருவேறட்டும்! 

கருகியதசைகள், 
மீண்டும் செருக்குகொண்டு 
சீறிப்பாயட்டும்! 

அந்நியனின் ஆணவதசைக்குள் 
காட்டெறிகள், காமவெறிகள் நடத்தட்டும்! கத்திகளின் கலவிப்பயணங்கள், 
இரத்தத்தை கவ்விக்கொண்டு
, மீண்டுமொரு யுத்தம் தொடங்கட்டும்!
 உடல்வானம் பறித்து, 
நிர்வாணம் சுவைத்தான்! 

சவத்தின்மீதும், தன்உடலை
 ஊடல்சஞ்சலம் வைத்தவன்! 
தன் தேசச்சிதையை தானே 
செக்கிழுக்க வைத்தவன்! 

நங்கையவளின் முந்திமறைத்து 
மூச்சடைத்து கொன்றவன்! 
நம் தேசச்சின்னத்தை, சாம்பலாய் 
நெறித்து தனக்கு தேசியசின்னம் பொறித்து கொண்டவன்! 

அவனின் பண்பாட்டுக்கு பட்டம் கொடுத்து, 
நம் பண்பாட்டை பலிகொடுத்தவன்!

 ஆகட்டும்! மீண்டும்ஆகட்டும்! 
ஆதிக்கம் செலுத்தவந்தவன் 
அரைமயிரையும் அறுத்துவிட்டு 
போகட்டும்! 
அரைஞாண் கயிற்றையும், 
உடன்கட்டையில் ஏற்றிவிட்டு 
போகட்டும்! 

லத்தியிலே புத்தி சொன்னவனின், 
நெத்தியின் மத்தியிலே, 
அவன்மார்புக்கூட்டை வைத்துதைக்கும் புதுயுக்தியும் நடக்கட்டும்! 
காய்சசப்படாத கரும்புழுசாறு
 காலைஉணவாகட்டும்!

 தியாகசபதமே! 
உன் உடற்கூறு எரிந்து முடிப்பதற்க்குள் 
எதிரியின் எலும்புகள் 
எண்ணமுடியாமல் குவியட்டும்! 

விறகுக்காடுகளின் விற்பனையில், 
எதிரியின் எலும்புகள் ஏழம் போகட்டும்! 

உன்னை சமந்த நிலத்திலே தேசம் சுதந்திரமாய் சமையட்டும்! 

இனி எமனின்மழுவாய் உழுநிலங்கள்
 விழையட்டும்! 
வாழ்க சுதந்திரம்! மீண்டும் வந்திடுங்கள்! உங்களைக்காண நாங்கள் துடிக்கிறொம்

எழுதியவர் : ருத்ரா நாகன் (23-Mar-15, 3:53 pm)
பார்வை : 116

மேலே