நானே அசைவத்தை வெறுக்கும் சைவ உண்ணி
 
            	    
                பட்டுனைக் கொல்வேன் பட்டுடை அணிவேன்....
அலங்கார  பொருளுக்கு பனையினை கொல்வேன்     
அப்பனையினை வளர்த்திட காடுகள் கொல்வேன் 
நானே அசைவத்தை வெறுக்கும் சைவ உண்ணி... 
விளைநிலம் கொன்று  மனையினை செய்வேன் 
மனையினை அமைத்திட  நல்மரம் கொல்வேன் 
அம்மரத்துக்காய் கூட்டுடன் குஞ்சையும் கொல்வேன்
 நானே அசைவத்தை வெறுக்கும் சைவ உண்ணி... 
வைத்தியனாக சிறு  தவளையைக் கொல்வேன்
செல்வந்தன் வருகையில் செல்வத்தை  கொல்வேன் 
வறியவன் வருகையில் மனதினை கொல்வேன் 
 நானே அசைவத்தை வெறுக்கும் சைவ உண்ணி...
	    
                
