மணமகள் தந்தை LAST MOMENT

அப்பா-
என்
சின்னஞ்சிறு தவறுகளை
அம்மாவிடம் மறைத்து-
அடம் பிடிக்கையில்-
அன்பாலென்
அழுகையை குறைத்து-
ஏதும் சாதிக்கையில்-
இவளென் ரத்தமென
பெருமையாய் உரைத்து-
என்னுயர்விற்காய்
உங்கள் கனவுகள் கரைத்து-என
இவையாவும்-
இன்றோடு முடிகிறது-
உங்கள் மகளாய் இருக்கும்-
இக்கடைசி தருணம்-வெறும்
கண்ணீராய் வடிகிறது!!!

இப்பாசம் திருப்பிட-
எனக்கொரு மகன்
பிறந்தால்-அதை
நீங்களென வளர்ப்பேன்-
தவறி மகளேதும்
பிறந்தால்-
உங்களிடமே தருவேன்-
ஏனெனில்-
நான் வளர்ந்தது
எப்படியென-எனக்குத்தெரியும்!!!

எழுதியவர் : அரவிந்த்.P (24-Mar-15, 1:22 am)
பார்வை : 67

மேலே