அவர்களும் மனிதரே

தொடரும்
நிழல்கூட‌
உனை தொடர
மறுக்கும்!

ஆடைகள்
களையாமலே
அம்மணப்படுத்தி
அழுகைகள்
ஆரவாரிக்கும்!!

சாணி தோய்த்த‌
பாதணிகளால்
மனச்சாட்சி
அடித்து
விரட்டும்!!

நிசப்தம் எனும்
சொல்லே
உன்னுள்
பேரோசையில்
சிரிக்கும்!!

கண்ணீர் சுரப்பி
கரைந்து கரைந்து
கருவாடாய்
மாறும்!

ஒளிக்கீற்றுகள்
உருகி உருகி
உன் மீது
இருளை அப்பும்!!

உன் வயிறு
உன் அனுமதியற்றே
குழறல் கூட்டம்
நடாத்தும்!!

உமிழ்நீர் வற்றி
தொண்டை
எங்கும் வறட்சி
பரவும்!!

சிந்தனையெல்லாம்
உணவுக்கான‌
உத்தேசத்தில்
மிதக்கும்!!

வியர்வைகள்
மழையாய்
உருக்கொள்ளும்
உன்னுடலில்!

புன்னகை
எல்லாம்
போர்கொடி
தூக்கும்!

அகிம்சைகள்
எங்கும்
ஆயுதம்
தரிக்கும்!

மனிதத்தோடு
அவர்கள்
வீட்டினுள்
நுழையுங்கள்!!
ம‌ன்னியுங்கள்
அது வீடல்ல!!

என் மொழியில்!
நரக வாசலின்
சாத்தான்கள்
கூடாரத்தின்
குந்துகள் அவை!!

அதோ நேற்று
என் வீதியில்!
இன்று உங்கள்
வீதியில்!நாளை
நிச்சயம் உங்கள்
வீதியில்
இருக்கபோவதில்லை
அந்த வீடுகள்!!

மகிழூந்து
கண்ணாடிகளால்
பார்த்துவிட்டோ!
ஓர் புகைப்படத்தை
எடுத்துக்கொண்டோ
இதுவரை நகர்ந்திருக்க‌
கூடும் நீங்கள்!!

ஆர அமர‌
போய்வாருங்கள்
கலைக்கூத்தாடிகள்
வீடுகளுக்குள்!!

அப்பழுக்கற்ற‌
புன்னகைகளுக்கு
மட்டும் அங்கு
குறைவில்லை!

உங்கள் வீட்டு
மாபிள் தரைகள்
எங்கும் முட்கள்
முகிழ்த்திருக்க‌
கூடும் நீங்கள்
மனிதரானால்!!

எழுதியவர் : புலவூரான் ரிஷி (24-Mar-15, 1:52 am)
பார்வை : 75

மேலே