புன்னகை

தோல்விகளின் எடை
கூடிக்கொண்டேதான்
போகின்றன..
மனம் கனக்க..!
வெற்றியின் உயரமும் கூட
எட்டி எட்டியே உயரத்தில்
போய்க்கொண்டிருக்கின்றது..
சிறகுகள் சோர்வடைய. !
விழுதல்களிலும்
எழுதல்களிலும்..
ஒரு புன்சிரிப்பு
கூடவே வரும்..!
அது..நான் அவளை
வெற்றி கொண்டு முத்தமிட
எத்தனிக்கும் போது
அவள் முகத்தில் தோன்றும்
புன்னகையின் முன்பதிவு ..
என் நெஞ்சில் ..!
பாரங்களும்
தூரங்களும்
தூள் தூளாகிட
தொடருது பயணம்..!