மனிதனாய் பிறந்துவிட்டேன்
நாயாய் பிறந்திருந்தாலும்
நன்றியுடன் இருந்திருப்பேன்
பசுவாய் பிறந்திருந்தாலும்
பால் கொடுத்து பசிதீர்த்திருப்பேன்
பறவையாய் பிறந்திருந்தாலும்
பலதேசம் பார்த்திருப்பேன்
பூனையாய் பிறந்திருந்தல்லும்
பாசமாய் வளர்ந்திருப்பேன்
நதியாய் தோன்றியிருந்தாலும்
தாகம் தனித்து ஓடியிருப்பேன்
மரமாய் தோன்றியிருந்தாலும்
நிழல் கொடுத்து நின்றிருப்பேன்
மலராய் தோன்றியிருந்தாலும்
வாசம் வீசி மலர்ந்திருப்பேன்
நெருப்பாய் தோன்றியிருந்தாலும்
வெளிச்சம் கொடுத்து உயர்ந்திருப்பேன்
நிலமாய் தோன்றியிருந்தாலும்
பாரம் தாங்கி இருந்திருப்பேன்
ஆகாயமாய் தோன்றியிருந்தாலும்
மழை பொழிந்து சென்றிருப்பேன்
கல்லாய் தோன்றியிருந்தாலும்
ஒருநாள் கடவுளாகியிருப்பேன்
பாவம் செய்துவிட்டேன்
மனவலி அனுபவிக்கும்
மனிதனாய் பிறந்துவிட்டேன்