திரு நங்கை
பெண்ணை விட
துன்பம் தாங்கும்
பொறுமைசாலிகள்,
தாயாலும் கூட
கைவிடப் படிகிற
அவல நிலை,
கேலிச் சித்திரங்களாய் வீதியில்,
ஆண் பாதி பெண் பாதி,
சிவனின் அவதாரம்
எடுத்த நீங்கள்
புறக்கணிக்கப் பட வேண்டியவர்கள் அல்ல
பூஜிக்கப் பட வேண்டியவர்கள்.