குளிர் பானம் டீ காபி பால் இவைகளுக்குப் பதிலாக மாட்டு மூத்திரம் குடியுங்கள் என்று சொல்வார்கள் பாருங்கள்

குளிர் பானம் / டீ / காபி / பால் இவைகளுக்குப் பதிலாக மாட்டு மூத்திரம் குடியுங்கள் என்று சொல்வார்கள் பாருங்கள்...!
பஞ்சகவ்யா எனப்படும் கோமியம், சாணம் உள்பட மாடுகளில் இருந்து பெறப்படும் 5 பொருட்களை வைத்து பல ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுவதாக அமைச்சர் ஸ்ரீபத் நாயக் முன்பு தெரிவித்திருந்தார்.
ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் 7 ஆயிரத்து 835 அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் பஞ்சகவ்யாவை வைத்து மருந்து தயாரிப்பது தெரிய வந்துள்ளது.
பால், தயிர், நெய், கோமியம் மற்றும் சாணம் ஆகியவை தான் பஞ்சகவ்யா என்று அழைக்கப்படுகிறது.
எல்லாம் சரி...பாலில் சுமார் 74 % கலப்படம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட் அமைத்த கமிட்டி சொன்னதே....இன்னும் அந்த கலப்பட பாலை சரி செய்யவில்லையே....
பால்....தயிர்...நெய் இவையெல்லாம் இருக்கட்டும்..பிறகு வருகிறேன் இவற்றுக்கு...
மாடு திங்கும் புல்லில் இருந்து வைக்கோல் வரை ரசாயன உரம் ... பூச்சிக் கொல்லி மருந்து...
இவை போக மாடு குடிக்கும் தண்ணீர்... பேப்பர் / போஸ்டர் / பிளாஸ்டிக் கழிவுகள் என்றெல்லாம் இருக்க....
இந்த மாடே ஹை ப்ரீடு தானே...அதனால் மாடு திங்கும் புல்லும் ஹை ப்ரீடு என்று இருக்கையில்...மாட்டு மூத்திரம் குடிப்பவனும் மட்டும் கன்ட்ரி பெல்லோ வா இருக்கானே....அதுவும் காவி கன்ட்ரி புரூட் பெல்லோவாக....!
- சங்கிலிக்கருப்பு -