தங்க மகள்

ஆர்ப்பரிக்கும் ஆழி;
அளவற்ற நீர்த்திரள்களுக்குச் சொந்தக்காரி.

கார்முகிலின் காதலி;பலரகக்
கப்பல்களின் கைகாரி.

பௌர்ணமி இரவில்
பதுங்கிப் பாய்வாள்,
பால் நிலவுப் பெண்ணிவள்.

கொள்ளை அழகு பொங்கிடும்
அழகு ஆழிக் கன்னியிவள்,
ஞாயிறொளியில் மின்னிடும் தங்கமகள்.

பவள வாயினாள்
மீன் விழியாள்-பல்
முத்தணி மார்பினாள்.

தென்றல் கொள்ளும் இவளிடம்
புயலென்னும் காமம்,
வலுப்பெற்று,வலுவிழந்து,கடந்து,
வாரிவழங்கிடும் வளம் பலவற்றை!

எழுதியவர் : பபியோலா (25-Mar-15, 9:09 pm)
பார்வை : 938

மேலே