மாற்றியது யார் இந்த உலகத்தை

மாற்றியது யார் இந்த உலகத்தை
எழில் கொஞ்சும் இயற்கையை செயற்கையாக்கியது யார் ?
யார் யார்
பெரிய ஜன்னல் முற்றம் வைத்த வீடு முழு நிலவும் வீட்டில் வரும் அந்த வீடு எங்கே
தென்னை ஓலை விசிரியை தொலைத்தது யார்
பனையோலை விசிரியை பறித்தது யார்
குளிரூட்டும் கருவியால் தென்றலை தொலைத்தது யார்
அழகுப்பெண்கள் அமர்ந்து விளையாடும் பல்லாங்குழி யை அழித்தது யார்
மழலையின் சிரிபொலி கேட்க்க கிச்சுகிச்சு தாம்பாளம் விளையாட்டை மறந்தது யார்
விடலைகள் வெட்ட வெளியில் விளையாடும் சாக்கையும் கில்லி தாண்டயும் மரைத்தது யார்
கன்னியரின் கும்மியை இப்போது குட்டுவது யார்
குமரிகள் ஆடும் கோலாட்த்தை தடுத்தது யார்
மாற்றியது யார் இந்த மாறா உலகத்தை -
யார் யார் யார் உங்களுக்கு தெர்யுமா தெரிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்
இன்னும் நிறைய யார்களை தெரிந்து கொள்ள ஆசை - காத்திருங்கள் இன்னும் கொஞ்சம் பொறுத்திருங்கள்