காதல் பிரிவில் பெண்மை
இதயம் அழுகுது இதயம் அழுகுது
என் கள்வன் எங்கே நீ
தாயின் மடியின் இன்பம் தந்த
என் காதல் எங்கே நீ
விழியில் வைத்த சாயம்
நீர்த்துளி கொண்டுபோக
விதவை கோலமாக
என் நாட்கள் மவ்ணமாக
ஆயிரம் பாம்பு சூழ்ந்த
குட்டி தவளை யாக- என்
இதய துடிப்பு மாற
உன் கரங்கள் என்னை மீட்காதென்றாள்
சூரியன் வாட்டும் புழுவாய்
உன் நினைவில் நானும் மறைந்திடுவேன்