தோல்வி உனக்கே

என்ன செய்வது
எனை மன்னித்துவிடு
என் தோழமையான தோல்வியே...
ஒவ்வொருமுறை நீ எனை
தீண்டும்போதும் எனக்குள்
வெற்றியின் வெறி
நம்பிக்கையோடு எட்டிபார்க்கிறது...
என்னை தோற்கடிக்கும் உன்னால்
என் நம்பிக்கையை
தோற்கடிக்க முடியவில்லையே...
பாவம் அது உன்னால் முடியாது
இதில் மட்டும் தோற்க
போவது நீ தான்....

எழுதியவர் : இந்திராணி (27-Mar-15, 2:42 pm)
Tanglish : tholvi unakke
பார்வை : 370

மேலே