வீதியில் விழுந்த விதைகளுக்காக

வீதியில் விழுந்த விதைகளே . . .
விழித்தெழுங்கள் விடியலை நோக்கி.
கடவுள் காத்த கலைமான்களே . . .
காலடியிடுங்கள் கழித்த காலனை.
பாரினில் பாதம் பதித்த பதங்களே . . .
பண்டிலனாகுங்கள் பாவக்கீற்றினை போக்க.
மனித மாண்பின் மாணிக்கங்களே . . .
மறந்திடுங்கள் மாய மோகத்தினை.
கல்வி கற்க கனிந்தவர்களே . . .
காத்திடுங்கள் கற்கும் நூலினை.
நல்லதோர் நம்பிக்கையின் நாயகர்களே . . .
நலங்கெடாதீர்கள் நலிந்த நிலையிலும்.
அச்சத்தை அல்லியாக்கும் அற்புதங்களே . . .
அரசாளுங்கள் அருட்கறம் பிடிக்கின்றோம்.
சவால்களை சந்திக்கும் சாதனையாளர்களே . . .
சத்தமிடாதீர்கள் சாதனை புரிந்தபோதிலும்.
தரணியை தாங்கும் தந்தங்களே . . .
தாழ்ந்துவிடாதீர்கள் தடைகள் தவிடாகும் வரை .
முயற்சியோடு நல்ல கல்வியும் , பண்போடு நல்ல அன்பையும் கொண்டால் ,
வெற்றியோடு நல்ல செல்வமும் ,மாண்போடு நல்ல பாசமும் - கரம் வந்து சேருமே . . .