போனது போகட்டும் சோகம் விடு

தோல்விகள் என்பது சகஜமடி - நீ நிம்மதி
தொலைத்தால் அப்போது துயரமடி.....
போனது போகட்டும் சோகம் விடு - வரும்
பொழுதுகள் உனக்காக சிரித்து விடு
ஆனது ஆகட்டும் துணிந்து விடு - இந்த
அகிலத்தை இப்போதே உன் கையில் எடு...
விழிகளில் கண்ணீரை துரத்தி விடு - இந்த
விடியலுக்கு ஒளி வேண்டும் வானம் பார்த்து விடு...!!