என்னவள் என்னவள் தான்

விழிப்புணர்வு தான்
விழிப் புணர்வு தான்
என்னவள் (தமிழ்க் காதலி)
எனது பார்வைகளை வருடும்
அப(பா)யக் குரல்
சத்தமாய் காதில் விழுகிறது
'உன் கண்கள் கக்கும்
கவிக் கங்குகளில்
இக்கால கவி அரசுகள்
குளிர் காய்கின்றன '
போதுமடி
விழிப் புணர்வு பஜனை என்றதும் அமைதியானாள்
அமர்க்களமில்லா அர்த்த ஆலிங்கனம்...
நிலம் கிழித்த நீரில்
அலைகளின் அபிநயம்...கண் கொள்ளாக் காட்சி !

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (27-Mar-15, 7:57 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 121

மேலே