என் கல்லூரி இறுதி நாட்கள்
முதன் முதலில் உன் சந்நிதியில் காலடி எடுத்து வைத்த நாளில்
ஆய்வக சீருடையில் இருந்த மாணவனை கண்டு வெருண்டேன்
அவன் என்னை கண்டு நகைத்தது ,
விடுதியில்என்னை விட்டு வீடு திரும்பிய என் குடும்பத்தினரை கண்டு
கண்ணில் நீர் மல்க நின்ற நாள் நினைவிளிருகின்றது இன்றும் ...
கல்லூரியில் என் முதல் நாள் முதல் வகுப்பு
நான் வெறுக்கும் கணித வகுப்பு ,
புதிய மாணவர்களை கண்டு சற்று ஐயமுற்றேன்
அனால் பழகுவதில் இல்லை தயக்கம் எனக்கு..
நண்பர்களுடன் வகுப்பில் செய்த குறும்புகள் ,
கொண்டாடி கழித்த பிறந்தநாட்கள்,
முதல் முதலாய் சென்ற சுற்றுலா,
யாவும் நினைவில் அசை போடுகின்றன ...
விடுதியில் தோழிகளுடன் செய்த சேட்டைகள் ,
அரட்டைகளால் அறையெங்கும் கேட்கும் எம் சிரிப்பொலிகள் ,
சோகம்,துக்கம் ,காதல், ஏமாற்றத்தால் அழுத அழுகைகள்
அப்பொழுதெல்லாம் எமக்கு தோள் குடுத்த தோழமைகள் ,
பரிட்சைக்கு முந்தைய நாள் மட்டும் படித்த நல்லிரவுகள் ,
ஒருவரை ஒருவர் உறவுகளை எண்ணி வாழ்ந்த நாட்கள், என்று
எம் விடுதி பயணமெல்லாம் எந்தன் கண்முன்னே ஓட....
குறும்பு செய்து தண்டனை பெற்று
நாட்கணக்கில் வகுப்பிற்கு வெளியே நின்ற பொழுதுகள் ,
பொய்கூறி விடுபெடுத்து திரிந்த தினங்கள் ,
வகுப்பறையில் பாட பொழுதில் சிரித்து , பேசி
ஆசிரியரிடம் திட்டு வாங்கிய நாட்கள் ,
கேண்டீனில் யாம் பெற்ற இன்பங்கள் ,
நண்பர்களுடன் ஊர் சுற்றிய பொன்னான வேளைகள்,
எம் பெருமைகளை என்றென்றும் பறைசாற்ற
எடுத்த ஆயிரகணக்கான புகைப்படங்கள் ,
வேலை பெற யாமடைந்த இன்னல்கள், என
இந்த பயணம் சுகமாய் சென்றுகொண்டிருந்த வேளையில்
திடீரென்றொருனால் உம் பயணம் இத்தோடு முடிகிறது
கிளம்புங்கள் என்றால் யாது செய்வோம் நாம் ???
எம் கல்லூரித்தாயே !!!
இந்த நான்கு ஆண்டுகளில் எத்துனை எத்துனை
பாடங்கள் கற்று கொடுத்த நீ ,,,
நண்பர்களிடத்தில் கிடைக்கும் சந்தோஷம் ,
சிறு சிறு தவறுகளால் கிடைக்கும் அனுபவங்கள் ,
தினமும் காதில் கேட்கும் கானமான
எம் ஆசிரியர்களின் அறிவுரைகள்,
இவையெல்லாம் இல்லாமல் வாழ்வதெப்படி
என்று கற்றுகுடுக்க மறந்ததேனடி ???
யாம் ஆடி பாடி மகிழ்திருந்த எம் வகுப்பறை ,
துள்ளித்திரிந்த எம் விடுதி ,
சுற்றித்திரிந்த எம் கல்லூரி வளாகம்,
எம் பேச்சு சப்தத்தால் கலகலத்த கேண்டீன்,
இவையனைத்தும் என்றென்றும் எம் புகழ் பாடும்..
எம் நினைவுகளை சுமந்து ஆண்டாண்டு காலத்திற்கும்
நிற்கபோகும் உன்னை மறப்பதெப்படி ???
உன் கருவறையில் இருந்த நாட்களின் நினைவுகளை
மட்டும் எடுத்துக்கொண்டு கண்ணீருடன் பிரிந்து செல்கிறோம் ,,,
மறந்து அல்ல !!!