பவளப்பாறை
சமுத்திர்ராஜனின் சீமந்தபுத்திரி
கால்சியம் கார்பனேட்டால் உருவாகி
பிளானுலாவிலிருந்து பாலிப்பாய் பருவமடைகிறாள்
ஆஸ்திரேலியாவில் இந்த அழகு தேவதை
மகுடம் சூடி குவிந்திருக்கிறாள்
கடல்வாழ் உயிரினங்களுக்கு
அன்னனையாய் உணவளிப்பவளே
வானிலை மாறுபாடுகளும்
மனித இடர்பாடுகளும்
அழிவின் விளிம்பிற்கு உன்னை
அழைத்து வந்துவிட்டன
கலிகாலத்தில்
கடலிலும் பாதுகாப்பில்லாமல்
தமிழீழப்பெண்கள் போல்
தவிக்கிறாள் தண்ணீரில்
"தங்கமகள்" அவளை
கரம்கொடுத்து கரைசேர்ப்போம்
வளம் அழியாமல் பாதுகாப்போம்...!!