பிறந்த நாள்

உன் பிறந்த நாள்
அது ஒரு
இனிமையான நாள்

இன்னாள்..

இந்த உலகிற்க்கு
நீ அறிமுகமான நாள்

இந்த உலகம் உனக்கு
அறிமுகமான நாள்

தாய் மார்பில்
பால் அருந்தி
முகம் புதைத்து
அன்பான அரவனைப்பில்
இளஞ்சூட்டில்
கதகதப்பில்
இனிமையான உறக்கம் போட
காத்திருந்த உன்
தவம் கலைந்த நாள்

உனக்கு மட்டுமல்ல
அன்னைக்கும் இன்னாள்
ஒரு பிறந்தனாளே

தாய் தந்தையின்
அன்பின் அடையாளமாய்
உன் தாய்
பத்து மாதங்களாய்ப்
அன்பைச் சேர்த்து வைத்த
பொக்கிசமாய் காத்து வைத்த
புதயலைப் பார்த்து
பூறித்துப்போன பொன்நாள்

நிறம் தெறியாமலே
உருவம் தெறியாமலே
மகணா? மகளா?
என்பது அறியாமலே
அன்பைப் பொழிய
ஆர்வத்துடன் ஏங்கிக் கிடந்த
ஆறுயிர் நெஜஞ்சங்களை
ஆற்ப்பரித்த அருமையான நாள்

தம்பதிகளாய் இருந்த
தலைவன் தலைவிக்கு
"பெற்றோர்" என்ற
பதவி உயர்வு
கிடைத்த நாள்

இப்படி இவர்கள்
சார்ந்த பலருக்கும்
புது உறவு
கிடைத்த நாள்

இன்னாள் உனக்கு
இன்னுமொரு புத்தாண்டே

எழுதியவர் : karthik mani (29-Mar-15, 8:28 am)
சேர்த்தது : karthik
Tanglish : pirantha naal
பார்வை : 104

மேலே