என் விழிகளில் வரைந்த ஓவியம் நீ 555

என்னவளே...
நீ நடந்து சென்ற பாதையில்
நானும் நடந்தேன்...
உன்னையும் உன் பாதசுவடுகளையும்
தொடர்ந்து நான்...
உனக்கு கொடுத்த
மலர்கொத்தை...
உன் பாதங்களில்
போட்டு மிதித்தாய்...
நீ மிதித்தது
மலர்கள் அல்ல...
அது என் இதயம் என்று
நீ எப்போது உணர்வாய்...
என் சுவாச காற்றாக
இருப்பது நீதானடி...
புல்லாங்குழலை வாசிக்க
தெரிந்த எனக்கு...
என் இதழ்களில் வைத்து
வாசிக்க மறுக்கிறேனடி...
புல்லாங்குழலின் உள்சென்று
வரும் காற்றில்...
நீ வேதனை
கொள்வாய் என்று...
உயிரானவளே காத்திருக்கிறேன்
உன் சம்மதத்திற்காக.....