நதிகள்

பொதுமறை போல் எங்களுக்கும்
மொழி இனம் மதம் கிடையாது இதை
உணர்ந்தவன் வள்ளுவன் அதனால்
உரக்கச் சொன்னான்
நீரின்றி அமையாது உலகு என்று...
அண்டை மாநிலங்களுக்கு கூட
தண்ணீர் தர விரும்பாமல்
அணைகட்டி தடுக்க நினைப்பவர்களே...
எல்லையில் ராணுவ வீரர்கள்
கொல்லப்படும்போது மட்டும் தான்
இந்தியாவின் உடன்பிறப்புக்களாய்
வலைதளத்தில் வலிமை காட்டுவீர்களோ...
விளக்கம் எதுவும் வேண்டாம்
விருப்பம் மட்டும் கேளுங்கள்
இறப்பதற்குள் நன்மைகள் செய்ய
நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்...
ஆனால்...
கடலில் கலப்பதற்குள் எங்கள்
புண்ணிய பணியைச் செய்ய
நதிகளை தேசியமயமாக்குங்கள்.....