எமனாய் மாறினாய் மானிடப் பதரே

இயற்கை எழுதிய இறவாக் கவிதை .
ஈர நதிகள் இங்குப் பாய்ந்துப்
பச்சை வயல்கள் பாய்விரித் தாடும்
பாடித் திரியும் புள்ளினக் கூட்டம் .
சோடியாய் நின்றுச் சோலைத் தன்னில்
சொந்தம் தேடும் ; சோகமாய் நிற்கும் .
சிட்டுக் குருவியின் சிறகை ஒடித்து
சிந்தை யில்லாச் சிறையில் அடைத்தாய் .
வனங்களை அழித்து வான்தொடக் கோபுரம்
வரிசை யாகவே வகையுறக் கட்டி
மின்சாரக் காற்றை மண்ணில் பாய்ச்சி
மரக்கிளை யோரம் மகிழ்வாய்க் கட்டியக்
கூட்டினைக் களைத்துக் கதிர்வீச் சைநீ
கம்பம் மூலம் கதறவே வைத்தாய் .
மரங்களை வெட்டி மாபெரும் வீட்டினை
மகிழ்ந்தேக் கட்டி மண்ணில் வாழ்ந்தாய் .
இதமுடைச் செயலா இதுவெனக் கேட்டால்
இன்னல் பலவும் இன்றேச் செய்தாய் .
உன்னைக் கேட்க உலகில் எவரும்
உவந்து வாரா உயிரினம் என்றே
எம்மைக் கொன்றுக் குவித்து
எமனாய் மாறினாய் மானிடப் பதரே .!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Mar-15, 4:34 pm)
பார்வை : 90

மேலே