எச்சரிக்கை அல்ல கட்டளை
விளைநிலங்கள் வீடுமனை ஆச்சு
விவசாயம் விவாகரத்து ஆச்சு
தாவரங்கள் தரையாச்சு
தண்ணீரே விருந்தாச்சு
பறவைகள் வண்ணப் பாடங்களாச்சு
விலங்குகள் விளாம் தொலைந்துபோச்சு
காடும் வானமும் கனவாச்சு
காவிரி ஆறும் வரண்டாச்சு
கல்லும் மண்ணும் விளைபோச்சு
காஉ ஒன்னே குறியாச்சு
கயவர் கூட்டம் பெருசாச்சு
கற்பும் வெறும் பேச்சாச்சு
ஆறாம் அறிவும் அடகாச்சு
காலவதியில் மூழ்கிப் போச்சு
இயற்கையும் இறைவனும் இணைந்தாச்சு - இது நம்
இறுதி என்று உறுதி ஆச்சு!
இன்று வாய்ப்பை ஈதல் ஒன்றும்
இயற்கைக்குப் பெரிதல்ல
இனைதிடுவோம் எண்ணங்களால்
இயக்கிடுவோம் இருக்கும் அறிவை
இயற்கையைப் பேண!