கனவு --------அஹமது அலி-------
சாமத்தில்
சங்கமித்து
மூன்றாம் சாமத்தில்
முத்தமிட்டுக் கொண்டன
உள்மனதின் நினைவுகள்
0
இரு விழி மூடியே
இமைக் கதவுகள் சாத்திட
எண்ணத்தின்
ஏதோவொரு சாளரத்தின் வழி
எட்டிப் பார்த்ததந்த
கனவு
0
எண்ணங்களின்
தொகுப்பு
தேக்கம்
வெளிப்பாடு
கழிவு
ஆசை
கோபம்
இப்படியான பரிணாமங்களில்
வந்து அசத்துகிறது
0
கருப்பு வெள்ளைத் திரையில்
வண்ணக்காட்சி
அரங்கேறிக் கொண்டிருக்கிறது
ஒருவருக்கு மட்டுமேயான
பிரத்யேகமான காட்சி இது
0
சாத்தியங்களையும்
அசாத்தியங்களையும்
அமானுஷ்யங்களையும்
காட்சிபடுத்துதலில்
கட்டையானது உடல்
கூடவே ரெக்கை கட்டியது உயிர்
0
ஆன்மச் சுற்றுலாக்களில்
முக்காலங்களுக்கும்
சென்று வர அரிய வாய்ப்பு
பயணக் கட்டணம்
முற்றிலும் இலவசம்
0
கவனிக்க.....
இலவசம்! இலவசம்!!