முகங்கள்
தினந்தோறும் கடந்து செல்லும்
பாதைகளில் எல்லாம்
எதார்த்தமாக தென் படும் முகங்கள்
இன்ன சாதி என்று பாராமல்
இன்ன மதம் என்று பாராமல்
இன்ன குலம் என்று பாராமல்
இன்ன கோத்திரம் என்று பாராமல்
இன்ன மொழி என்று பாராமல்
மனிதன் மனிதனாய் வாழ்வது
முன் பின் அறிமுகமில்லாத
எதார்த்த முகங்களுடன் தான்

