உணரல்
தோல்வியின் ஸ்பரிசம்,
மிகவும் கொடுமையானதோ?
அதன் வீரியத்தை விவரிக்கத்தான்,
நீ என் வாழ்க்கைக்குள் வந்தாயோ?
என்று அடிக்கடி ஒரு எண்ணம் என்னுள் !
கேட்க நினைக்கிறேன் !
அது தோன்றும் பொழுதெல்லாம் !
ஏனோ !
நீ அருகிருப்பதில்லை !
இருக்கையில்,
எப்படியோ?
அவ்வுணர்விருப்பதில்லை !!

