இக் காதல்

காதலும் தெய்வமும் ஒன்று தான்
உயிரை குலைக்கும் மருந்து தான்

இருக்கும் போது இதயம் இறுகும்
பிரியும் பொழுது அதுவே கரையும்

தென்றலின் கனத்தை நான் தாங்கவில்லை
மலரின் கொடையை அதை காணவில்லை

கருணைக் கடலோ வற்றிப் போக
அசிரிரியின் குரலாய் காதல் சூழ
கனவில் வாழும் கண்ணன் நானே

வள்ளல் வாழ்கை வந்தவனும் காதல் படகில் கஞ்சன் ஆவான்

வல்லவன் வாழ்கை வாழந்தவர் எல்லாம் சுவடில் ஏற முடியவில்லை
காதலுக்கு கோவில் கட்டியவனோ குழந்தையின் நெஞ்சில் குடி கொள்கிறான்

குருடனும் கூட வரைய ஆசை பட்டான்
காதலின் அழகை செவியில் கேட்டு

தீங்கற்ற எண்ணம் பெற்ற கருவிழி வா வா என்று கீதம் பாட
என் உணர்வை கொள்ளும் காதல் பதுமையே

எழுதியவர் : கண்மணி (3-Apr-15, 12:58 am)
சேர்த்தது : கண்மணி
Tanglish : ikaathal
பார்வை : 136

மேலே