பயம்

---------------நீண்டு வளர்ந்திருந்த அந்த ஆலமரத்திலிருந்து நெடுநாட்களாய் விடுதலைக்காக ஏங்கி, இன்று காற்றினால் அவ்வெண்ணம் நிறைவேறியது போல ஆலமர இலையொன்று காற்றில் மிதந்து வந்து ஒய்யாரமாய் தண்ணீரின் மேல் விழுந்தது. நீரில் விழுந்தும் அதன் ஆட்டம் குறையாது நீருக்கு ஏற்றவாறு அனும இங்கும் ஆடியும் தாநீருக்குள் மூழ்கியும் தனது சந்தோசத்தை கொண்டாடியது.

-------------அந்த இலையின் ஆட்டத்திற்கு ஏற்ப தனது தலையை ஆட்டிக்கொண்டே தன்னிலை மறந்து அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் அமுதன். அந்த இல்லை இரண்டு முறை தண்ணீரில் மூழ்கி மேலெழும்பியது.மூற்றம் முறை மூழ்கும் போது ஏதோ ஒரு விசை அவனை பின்னாலிருந்து தள்ளியது.கற்பனையில் மூழ்கி இருந்த அவனுக்கு பதட்டப்பட யோசிப்பதற்குள் அவன் முதுகு தண்ணீருக்குள் மூழ்கி விட்டது. யாரோ தள்ளிவிட்டிருக்கிறார்கள் என்பதும் மட்டும் அவனுக்கு புரிந்தது. தண்ணீரில் குளிரேதும் தெரியவில்லை. பலமுறை அங்கு குதித்து பழகியவன் போல அவனுடல் உள்சென்றது. பாதம் தரையை தொட்டு உந்தியதும் அவனுடல் மேல வர ஆரம்பித்தது. கைகளை நன்கு விரித்து தண்ணீருக்குள் அமிழ்தினான். உடல் சட்டென்று மேல வந்தது. முகம் சூரிய ஒளியினை உணர்ந்தது ஆனால் விழியும், உடலும் அவனை எச்சரித்தன. உயிரோ உன்னை விட்டு போய்விடுவேன் என்று பயமுறுத்தியது.எங்கு இருக்கிறோம் என உணர்வதற்குள் தன் பின்னாலிலிருந்து யாரோ தன்னை அவர்வசம் இழுப்பதை உணர்ந்தான்.


.......சாதாரணமாக வேகமாக நடக்க கூடியவன் என்றாலும் சாயுங்காலம் விளையாடிய கபடி பயிற்சியும், உண்ட உணவும் அவனை மெதுவாக நடக்க செய்தன. விடுதி அறைக்கு செல்லும் போது அவன் கல்லூரி நண்பன் கார்த்திக் உடன் பேசிக்கொண்டே சென்றான். அமுதனுக்கு இரண்டு நண்பர்கள் கார்த்திக் மற்றும் தினேஷ் . தினேஷ் முக்கிய வேலை காரணமாக ஊருக்கு போயிருந்தான்.

........."மச்சான்.. எங்க கேப்டன் சரியான சைகோ டா..." என ஆரம்பித்து புலம்பிக்கொனே வந்தான் அமுதன். கார்த்திக் அதை காதிலே வந்காதவனை போல சிறிது தூரம் சென்றதும் " நான் தண்ணி முடுசிட்டு வரேன்.. நீ ரூம் கு போ.." என கழன்று கொண்டான்.

.........கால்கள் பயங்கரமாக வலிதததால் அமுதன் மெல்ல ஒவ்வொரு அறையாக கடந்து போய்க்கொண்டிருந்தான், அவன் மெதுவாக வரட்டும். அதற்குள் நாம் அவனையும், அவன் கல்லூரி விடுதியை பற்றியும் தெரிந்து கொண்டு வருவோம்.

.........அமுதன், பெயருக்கேற்றவாறு நல்ல குணமுடையவன். 5 அடி 2 அங்குலம் உயரம். மாநிறம். சுருட்டை முடி. யார் வம்புக்கும் போகாதவன். அதற்கு அவனுள் இருந்த பயம் ஒரு முக்கிய காரணமாய் இருந்தது. அதனால் எல்லோரிடமும் நண்பனை இருந்து வந்தான். வீட்டில் கடைசிப்பையன் என்பதால் செல்லம் அதிகம். அண்ணன்கள் , அம்மா , அப்பா என நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன்.

........திண்டுக்கல் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். கல்லூரி எப்படியோ எண்ணிக்கையற்ற மரங்கள், எப்போதும் வீசும் காற்று என விடுதி அருமையாக இருந்தது.. அது அமுதனுக்கு மிகவும் பிடித்திருந்தது. மூன்றாவது மடியில் ரூம் எடுத்து அரியர் ஏதும் வைக்காமல் சராசரி மாணவனாய் படிதான்.

......இவ்ளோ நேரம் ஆகியும் இப்போதான் படியேற ஆரம்பிக்கிறான் அமுதன்.. வாங்க அவன்கூட பொய் சேர்ந்து கொள்வோம்.

.....மெதுவாய் ஒவ்வொரு படியாக யோசனை செய்த படியே ஏறினான் அமுதன். படிகட்டானது மேற்குப்புறமாக மேலேறி பின் கிழக்குப்புறமாக சென்றது. அவ்வாறு திரும்பும் இடத்தில் வரிசையாக கழிவறைகள் கட்டப்பட்டு இருந்தன. அதற்கு போகும் வழி மிக சிறியதாகவும் இருந்ததாகவும் இருந்தது. அதன் வழியே பார்த்தால் இறுதியில் ஆலமரக்கிளையானது தென்படும்.

......அமுதன் மேற்சொன்ன இடத்தை அடைந்ததும் யாரையோ தேடுவதை போல தேடினான். பின் மெதுவாய் கிழக்கு புறமாய் திரும்பி மேல ஏற முற்பட்டு பின் கழிவறைக்கு செல்லும் சின்ன சந்தை பார்த்தான். அப்பாதை 10 மீட்டர் தூரம் இருக்கும். ஒரு டியுப் லைட் மட்டும் எரிந்தது. மற்றொன்று எரியாமல் இருளைகூட்டி பயமுறுத்தியது. அமுதன் திரும்பி சுவிட்சை பார்த்தான். அது ஏற்கனவே போடப்பட்டிருந்தது. இறுதியில் தென்பட்ட ஆலமரத்தின் கிளையை பார்த்தான் அதில் யாரோ அமர்ந்து இவன் விழியையே உற்று பார்த்து கொண்டிருந்தான். அமுதன் மூளை குழம்பிப்போயிற்று அவன் யார் யார் என்று நெற்றியை சுருக்கி யோசித்து உற்று பார்த்தான். "ச்ர்ர்ர்ர்...." என்ற சத்தம் திடீரென அவன் காதை கிழிப்பது போல் இருந்தது. அமுதன் வெகுவாக பயந்து கால்கள் தானாக ஆடதொடங்கின.


00000000000000000

........" ச்ர்ர்ர்ர்...." என்ற சத்தம் கேட்ட நொடியில் அவன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நடுங்கி போனான். அவனது மூளை அவனை எச்சரித்து உண்மையை உணரச்செய்தது. அப்பாதையில் உள்ள கடைசி கழிவறையில் யாரோ நீரினை உபயோகிக்கும் சத்தம் தான் அது என்பதை இப்போது அவன் உணர்ந்தான். மேலே நடக்கையில் மீண்டும் அதே இடம் வந்தது " பார்க்காதே பார்க்காதே..." என் கட்டளையிட்டுக்கொண்டே நடையின் வேகத்தை அதிகப்படுத்தினான்.

......மூன்றாவது மாடி சில நண்பர்களின் அறையை கடந்து போக வேண்டியிருந்தது. ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு கொண்டாட்டங்கள். கானா பாடலுக்கு ஆட்டம், ரஜினி பேசும் பாட்சா பட வசனம் என அமுதன் கத்தில் எங்கோ வெகுதொலைவில் கேட்டபது போல இருந்தது. பழக்கப்பட்ட இடம் என்பதால் அவனது கால்கள் தானே அறையை நோக்கி நடந்தன. அரை வந்தது.

....சன்னலின் மேலே வைத்திருந்த சாவியை எடுத்து உள்ளே நுழைந்து கதவை சாத்திவிட்டு கட்டிலில் விழுந்தான். ஏதோ யோசனை செய்துகொண்டே பின் கதவின் வழியே பார்த்தான். கதவு திறந்திருந்தது. கற்று நன்றாக வரும் என்பதால் எதையும் மூடாமல் விட்டிருந்தார்கள்.

.... கதவின் வழியே வேம்பும் அதன் கிளையும் இருட்டில் அறையின் மங்கிய ஒளியில் தெரிந்தது. அமுதனின் கண்கள் விரிந்தன. தலையை பிய்த்துக்கொள்ளலாம் போலிருந்தது அவனுக்கு. அதே விழிகள், அதே முகம், அதே கோர பார்வை, உடம்பு ஏதும் தெரியாமல் அந்த முகம் மட்டும் அவனுக்கு தெரிந்தது. பயத்தில் கண்களை மூடிக்கொண்டான். "தூங்கு.. தூங்கு " என தனக்குள் சொல்லிக்கொண்டான். ஆனால் அவனால் தூங்க முடியவில்லை. கண்களை எவ்வளவோ இறுக்கி மூடியும் பயம் அவனது கண்களை திறந்தது. இப்போது அம்முகம் வேறு எங்கோ காணாமல் போயிருந்தது. நிம்மதியில் மனம் நிறைந்தான். அனல் உள்மனம் அவனை தூங்காது தொந்தரவு செய்து கொண்டிருந்தது.

..... வேகமாய் எழுந்தான். எதை பற்றியும் யோசிக்காமல் பின்பக்கம் சென்றான். மங்கிய வெளிச்சத்தில் இறந்த பின்புறத்தை சன்னல்களை சத்தி இருளாக்கிவிட்டு பின் கதவையும் சாத்தி தாளிட்டான். மறுபாகம் சென்றான்.கொசு உள்ளே வராமல் இருக்க கம்பி வலை போடப்பட்டு கதவை சாத்த சிறிது துளைமட்டும் இருந்தது. அவன் சிந்தனையில் வேறேதும் இல்லை. மிகவும் வேகமாய் செயல்பட்டான். அத்துளை வழியாக கையை உள்ளே நுழைத்து கதவை பிடித்து உள்ளே இழுத்தான். அவனது தலையும் சன்னலின் உள்ளே போய் வெளிவந்தது.

......அவனுக்கு ஒரு பிரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அவனுக்கு பின்னால் அந்த உருவம் ஆம் அதே உருவம் ஆலவிழுதிலேயும் பின் வேம்பு கிளையிலும் இருந்த உருவம் இப்போது அவன் பின்னே நின்று இவன் முகத்தையே உற்று பார்த்துக்கொண்டிருந்தது. " பதட்டத்தில் தனது அம்மா வை அழைத்தான். நா வரவில்லை. பின்னர் திரும்பி காத்த முயன்று கொண்டே அந்த கருப்பு உருவத்தின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டான். அந்த உறவத்தின் தலைப்பகுதி அங்கேயே இருக்க கால் பகுதிமட்டும் ஊசலாடியது.கை வலிக்காமல் ஏதோதோ தலையணையில் குத்தியதை போல் இருந்தது.பின்பு தான் அது கொடியில் தொங்கிக்கொண்டிருந்தத கருப்பு நிற ஜீன்ஸ் பேன்ட் என்பதை உணர்ந்தான். பயநடுக்கதோடு அலமாரியை திறந்தான். அங்கு முருகர் சிரித்தபடி இவனே பார்த்துக்கொண்டிருந்தார். கண்களை மூடி வேண்டாமல் ஏதேதோ யோசனையில் ஆழ்ந்தான் அமுதன். கண் திறக்கும் போது இந்த முறை வெள்ளையான உருவம் கதவினருகே வந்து நின்றது.

000000000000000000

...........................அங்கே கூடியிருந்தத அனைவரும் ஒருங்கே கவனத்தை செலுத்தியிருந்தனர். எவ்வளவோ முயன்றும் சிருக்கு அது என்ன என்பது விளங்க வில்லை. ஆனால் எதோ மிகப்பெரிய விஷயம் என வியந்து பார்த்துகொண்டிருந்தனர். மேடையிலிருந்த ஒருவர் மட்டும் குறுநகையோடு எவ்வித வியப்பும் இல்லாமல் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். நடப்பது அவருக்கு பிடிக்கவில்லையா இல்லை அதில் அவர்க்கு ஆர்வம் இல்லையா என்பது தெரியவில்லை. அது அவரது பிரச்னை நமக்கு என்ன வந்தது.

.........................சில நிமிடங்களுக்கு பிறகு கூட்டத்திலிருந்து கைத்தட்டல் பறந்தது. " புள்ளனா இப்படி இருக்கணும் நீயும் இருக்கியே ..! " என ஒருவர் அருகிலிருக்கும் ஒரு சிறுவனைப்பார்த்து சொன்னார். அந்த சிறுவன் அதை கண்டுகொண்டவனாய் தெரியவில்லை. அருகில் தனியாய் நின்ற அமுதன் சொன்னவரை பார்த்தான். ஆம். நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டம் தான் அது. சிறிது நேரம் கழித்து ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிந்து அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அமுதன் மேடையின் அருகிலேயே நின்று. ஒரு குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

......................அமுதனுக்கு மனம் எதோ பாரமாக இருந்தது. ஏதோ அவன் மனதை உறுத்திக்கொண்டிருந்தது. அப்போது அவனை ஒருவர் கடந்து போனார். அமுதனுக்கு பழக்கப்பட்டவராய் தோன்றவும் பட்டென கேட்டான்.

"ஐயா....". அவர் திரும்ம்பினார். மேடையில் ஏதும் நடக்காததை போல அமர்ந்திருந்தாரே அவர் தான் அது.

"நான் ஆறாம் வகுப்பு மாணவன். உங்களிடம் ஐந்தாம் வகுப்பு படிதேனே.! " என்றான் அமுதன். அவருக்கு யாரென்று தெரியவில்லை என்றாலும் தெரிந்தவரை போல முகத்தை வைத்துக்கொண்டார்.

" இன்னைக்கி மேடைல ஒரு சின்ன பொண்ணு 1330 குறளையும் மனப்பாடமாய் சொன்னதே.. சே..எவ்ளோ கைத்தட்டல் அப்படியே இடி போல கெட்டுதில்ல. எல்லாருமே அந்த பொண்ணு சொல்றதையே பார்த்துட்டு இருந்தாங்க. "

அவருக்கு புரிந்து போனது. " ஆமாம். அதற்கென்ன இப்போ? "

"இல்லை ஐயா.. இந்தமாதிரி என்னையும் சின்ன வயசுல யாராவது சொல்லிகொடுத்திருந்தா. நானும் கைத்தட்டல் வாங்கிருப்பேன் "

" இப்ப நீ என்ன பண்ணப்போற.? "

" நானும் அடுத்த வருஷம் இந்த மாதிரி குறளை வாசிச்சு காமிச்சா எனக்கும் கைதட்டல் கிடைக்கும்-ல "

" அப்போ உனக்கு கைதட்டல் தான் வேணுமா? அப்படினா வங்கிக்கோ." என சொல்லிவிட்டு கையை இரு முறை தட்டினார்.

அமுதனுக்கு விளங்காமல் அப்படியே நின்றான்.

" வள்ளுவர் எழுதினது அஞ்சு நிமிஷம் மனப்பாடம் பண்ணி ஒப்புவிக்க இல்லை. அது ஒவ்வொன்னும் வாழ்க்கைக்கான வழிமுறைகள். அதுல ஏதாவது ஒரு குறளை எடுத்து உன் வாழ்கை ல கடைபிடி. அது உன்னை பெரிய ஆள் ஆக்கும்" கோபமாய் சொல்லிவிட்டு கிளம்பினார்.

அமுதனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. மெல்ல வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.


000000000000000000000



..................முருகனை பார்த்துக்கொண்டிருக்கையில் பின்னே ஊர் உருவம் வெள்ளையாய் வந்து நின்றதும் மூளை நொடிப்பொழுதில் அவனது தலையை திருப்பியது.

" டே.. இப்படிதான் சத்தமே இல்லாம பின்னால வந்து நிப்பியா ? எரும.." அருதலடைந்தன் அமுதன்.

"ஏண்டா.. " வெள்ளை நிற டி-ஷர்ட் ல் இருந்த கார்த்திக் ஒன்றும் புரியாமல் வினவினான்.

..................நிம்மதி அடைந்தான் அமுதான். ஆனால் கார்த்திக்கிடம் எதுவும் சொல்லாமல் படுக்க சென்றான். ரொம்ப நேரம் தூக்கம் வரத்து கருப்புநிற ஜீன்ஸ் பேண்டையே பார்த்துக்கொண்டிருந்து பின் அவனை அறியாமல் உறங்கிப்போனான்.

...................உறங்கிய விழிகள் விழித்தன.கண் மும் பயங்கர இருட்டாய் இருந்தது. அருகிலிருந்த கை பேசியை எடுத்து மணியை பார்த்தான். அது 2.48 என காட்டியது. கண் மூடி உறங்க நினைத்தான். முடியவில்லை. அந்த கருப்பு நிற துணி மட்டுமே இவன் கண் முன்னே வந்தது. எழுந்து லைட்டை போட்டான். இப்போது படுத்தான். மேலே மின் விசிறி தெரிந்தது. அதையே உற்றுபார்த்தான். அதற்கு போட்டியாக ஏதோ அசைவதாய் தோன்றியது.

...............முகத்தை லேசாக திருப்பினான். சுவற்றில் மாட்டியிருந்த முகம் பார்க்கும் கை அகல கண்ணாடி இடமிருந்து வலமாக பின் வலமிருந்து இடமாக ஊசலாடியது. அதில் மறுபக்கம் உள்ள அறையின் அனைத்தும் வரிசையாக பிம்பமாக தெரிந்தது. அது மிக கோரமாகவும் பயமுறுத்துவதாகவும் இருந்தது.

................சற்று யோசித்து பின் மின்விசிறியை நிறுத்தினான். அது மெல்ல தனது சுழற்சியை நிறுத்தியது. இப்போது பார்த்தான். கண்ணாடி ஆடாமல் இருந்தது. சற்று நேரம் கழித்து மெல்ல தனது அசைவை துவக்கியது கண்ணாடி. அமுதனுக்கு மூச்சே நின்று விட்டது. இது போல முன்பெங்கும் அவன் பயந்ததில்லை. கதைகளில் மட்டுமே கேட்டிருக்கிறான். இப்போது தான் அவன் பயத்தை பார்க்கிறான். கால்கள் நடுங்கின. கவிழ்ந்து படுத்தான். அவனது கை அருகில் படுத்திருந்த கார்த்திக்-இன் கையை பிடித்தது.கார்த்திக் எந்த ஒரு அசைவுமில்லாமல் உறங்கிக்கொண்டிருந்தான். அமுதனுக்கு பின்னால் கண்ணாடி வேகமாக ஆட தொடங்கியது. அதற்கு நேர் எதிர்புறம் கருப்பு பேண்டும் கண்ணாடிக்கு ஏற்றார் போல் ஆடத்தொடங்கியது. பின் அந்த கருப்பு நிற துணி பெரிய கருப்பு உருவமாக மாறியது. அமுதன் கையை விட்டு கடீலின் கம்பியை இறுக்கி பிடித்தான். அந்த கரிய உருவம் கொடூரமாக முகம் மட்டும் வெள்ளையாக உடம்பு கருப்பு உருவம் போற்றியது போல் கரியதாக இருந்தது. அதன் கண்களில் நெருப்பு அனலாக பறந்தது. கனத்த கையைகொண்டு அந்த உருவம் படுத்திருந்த அமுதனை பின் பக்கமாக தாக்க தயாரானது.


000000000000000000000



....................அதிகாலை 5 மணி.

"டொக் டொக் ...."
பதிலேதும் வரவில்லை.
"டொக்..டொக்..டொக்.." கதவு இப்போது அதிகமாக தட்டப்பட்டது.

"அம்மா.. போய் பால் வாங்கும்மா...! " அமுதனின் அண்ணன் குரல் உள்ளே இருந்து கேட்டது.

பொறுமை இழந்து அடுத்த முறை தட்ட முற்படும் போது கதவு திறந்தது.

"கண்ணு..! என்னடா திடீர்னு வந்துருக்க.. நேத்திக்கே காலேஜ் லீவ் தான.. அப்பவே கிளம்பி வரவேண்டிதான.. ஏதாவது வேலை இருந்துச்சா?" என அமுதனின் அம்மா கேள்வி கனைகளை தொடுத்தாள்.

அமுதன் பதிலேதும் சொல்லவில்லை. வழக்கத்திற்கு மாறாக மிக சோர்வுடன் காணப்பட்டான். கண்கள் ஐந்து நாட்கள் உறக்கத்தை காணாதது போல் இருந்தது. அம்மாவை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்தான். கால்கள் இன்றே கலந்து விழுவது போல் நடந்தான் அமுதன். அவன் அம்மாவிற்கு உயிரே இல்லை.

"என்ன சாமி ஆச்சு ஏன் இப்படி நடக்குற.?"
இதற்கும் பதில் இல்லை.

நேரே உள் அறைக்கு சென்றவன் கட்டிலில் அப்படியே விழுந்தான். இமைகள் ஒன்றுக்கொன்று காந்தம் வைத்து இழுத்ததுபோல் உடனே ஒட்டிக்கொண்டன. காதுகள் மட்டும் சில விசயங்களை வெளி இருந்து வங்கி உள்ளே அனுப்பி கொண்டிருந்தது.

"பையன் திடீர்னு இப்படி வந்துருக்கானே.. இப்ப பார்த்து இந்த மனுசன் டீ கடைக்கு போயிருக்கே.."

அவனம்மாவின் புலம்பல் தான் அது.

அமுதன் கண் விழித்தான். தொலைக்காட்சி ஓடும் சத்தம் கேட்டது. அதில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். அதுவும் இவனைப்பற்றி. அமுதனுக்கு ஒன்றும் விளங்கவில்லை அமுதன் வெளி அறைக்கு வந்தான். அந்த உரையாடல் நின்றது.

அமுதனின் தாயும் அவனது நண்பன் கோபியும் தான் அந்த உரைடளுக்கு சொந்தக்காரர்கள்.அவர்களிடம் ஏதும் பேசாமல் சமயலறையில் நுழைந்து நீரை பருகிவிட்டு பின் உள்ளறையில் புகுந்துகொண்டான். அம்மா கோபியிடம் ஏதோ சொல்ல அவன் அமுதன் அருகில் வந்தான்.

அமுதன் அந்த அறையின் மூலையையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
"ஏன்டா இப்படி இருக்க.. ? அம்மாகிட்ட பேசுடா. என்ன பிரச்சனையா இருந்தாலும் பார்த்துக்கலாம் டா. என்ன பொண்ணுகிட்ட லவ் வ சொல்லிட்டயா.?"

முறைத்தான் அமுதன். தேவையில்லாமல் பேசுகிறோம் என கோபிக்கு புரிந்து போனது.

"சரி வா. எப்பவும் போவமில்ல அங்க போவோம்."

"இல்ல நான் வரல.."

"இல்ல நீ இப்ப வர.." கட்டாயப்படுத்தினான்.

சரி என்பது போல் தலையை மட்டும் ஆட்டினான் அமுதன்.


00000000000000

.........................அமுதனின்பின் மண்டைக்கு நேராய் அந்த கரிய உருவத்தின் இரும்பை ஒத்த கை மேல நன்றா ஓங்கி அடிக்க தயாரானது. திடீரென அமுதன் திரும்பினான். இவ்வளவு நாள் பயத்தையே காணாத அவனுக்கு பேயின் உருவத்தினை கண்முன்னே மிக அருகில் பார்த்தான். அவன் சிறிய வயதில் அவனது அண்ணன் , பக்கத்துக்கு வீட்டு அக்கா ஏரிக்கரையோரம் கண்முன்னே பார்த்தாய் சொன்ன அத்தனை அடையாளங்களும் அப்படியே ஒத்திருந்தது. அவனுக்கு பயப்பட கூட நேரமில்லை அடி இடது காதின் கீழ்புறம் விழுந்தது. கட்டிலில் படுத்திருந்தவனின் உடல் நேராய் இருந்த சுவற்றில் அடித்து மூளை வெளிவரும் அளவுக்கு அடி இருந்தது.அவனது இடப்புறம் காதின் இடத்தில பெரிய துளை இருந்தது.அதிலிருந்து ரத்தம் நீரென வடியதொடங்கியது.

"டேய் அமுதா... அத நெனைக்காதடா..."
"அமுதனின் உள்மனம் திட்டியது.இந்த மாதிரி பைதியக்காரத்தனமாநேனைக்கதடா."

.......................ஆனால் அமுதானால் எள்ளளவும் தூங்கமுடியவில்லை..அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.



.......................நினைவுகள் அமுதனின் மனதில் ஒரு வித திகிலோடு ஓடிக்கொண்டிருக்க அவனது சிறு வயது நண்பர்களுடன் அந்த வாய்க்கா மேட்டினை ஏறினான்.

அந்த வாய்க்கா கரையின் மீது ஏறியவுடன் அமுதன் மனம் ஓரளவு சம்பவத்தை மறந்திருந்தது. அந்த மூன்று பேருக்கும் பெரிதாய் நீச்சல் தெரியாது. அதனால் நீரின் ஓட்டத்திலேயே நீந்தி விளையாடுவர்.வாய்க்காலில் சைபர் எனும் ஓர் இடமுண்டு. அங்கு நீரானது நிலத்திற்கு அடியில் சென்று பின் மேலெழும்பி செல்லும்..வாய்க்காலின் குறுக்கே பாதை வரும் போது அந்த சைபர் வசதியாய் இருக்கும்.

............தண்ணீர் மேலெழும்பி வரும் போது ஒரு வித வேகத்துடன் வரும். மற்ற இரு நண்பர்களும் சட்டென்று நீரை பார்த்ததுமே குதித்துவிட்டனர். ஆனால் அமுதன் ஆடைகளை களைந்து எதோ ஒரு யோசனையில் எதையோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.குறும்புகார விஜி அவனை பின்னே வந்து தண்ணீருக்குள் தள்ளினான்.

தனது தலையை ஆட்டிக்கொண்டே தன்னிலை மறந்து இலையினை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தா அமுதன் அந்த இல்லை இரண்டு முறை தண்ணீரில் மூழ்கி மேலெழும்பியது மூன்றாம் முறை மூழ்கும் போது அமுதனும் விழுந்தான். தள்ளியது நண்பன் தான் என்பது மட்டும் அவனுக்கு தெரிந்தது. கற்பனையில் மூழ்கி இருந்த அவனுக்கு பதட்டப்பட யோசிப்பதற்குள் அவன் முதுகு தண்ணீருக்குள் மூழ்கி விட்டது.தண்ணீரில் குளிரேதும் தெரியவில்லை. பலமுறை அங்கு குதித்து பழகியவன் போல அவனுடல் உள்சென்றது. பாதம் தரையை தொட்டு உந்தியதும் அவனுடல் மேல வர ஆரம்பித்தது. கைகளை நன்கு விரித்து தண்ணீருக்குள் அமிழ்தினான். உடல் சட்டென்று மேல வந்தது. முகம் சூரிய ஒளியினை உணர்ந்தது ஆனால் விழியும், உடலும் அவனை எச்சரித்தன. உயிரோ உன்னை விட்டு போய்விடுவேன் என்று பயமுறுத்தியது.எங்கு இருக்கிறோம் என உணர்வதற்குள் தன் பின்னாலிலிருந்து யாரோ தன்னை அவர்வசம் இழுப்பதை உணர்ந்தான்.



0000000000000000


......யாரோ தன்னை பின்னல் இழுப்பதை உணர்ந்ததும் அவன் கை வேகமாக அருகில் இருந்த சுவற்றில் இருந்த ஒரு சிறிய இடுக்கினை பற்றிக்கொண்டான். பயம் அவனுள் ஆழமாக குடிகொண்டிருந்தது.அதில் அவனுக்கு தெரிந்த அரைகுறை நீச்சலும் மறந்து போயிருந்தது. அவன் அந்த இடுக்கினை பிடித்தாலும் அவனதுகால்களை யாரோ பின்னோக்கி இழுத்தனர். அவனது நண்பன் தள்ளிவிடும்போது தான் நீரின் உள்ளோட்டதிற்கு அருகில் தள்ளபட்டிருப்பதை உணர்ந்தான் அமுதன். வருகின்ற நீரின் கொந்தளிப்பால் ஒரு பாதி நீர் உள்பக்கமாகவும் மறு பாதி வெளியேயும் அடித்து செல்லும். உள்செல்லும் நீரின் இழுவையினை அன்று தான் அமுதன் முதன் முதலாக பார்க்கிறான். அதனால் அவன் அந்த இடுக்கினை மிக அழுத்தி பிடித்தான். அவனது கைகள் வலிக்கதொடங்கின.

......எதிரே யாராவது உதவிக்கு வருவார்களா என பார்த்தான் எதிரே நீரில் கோபி ஏற்கனவே குதிதிருந்தான். கரையில் சுவற்றின் மீது விஜி தனது ஒரு காலை மட்டும் நீட்டிக்கொண்டு " டே.... புடிடா... காலை புடிச்சுக்கோ மச்சான்..." என கத்தினான். கோபிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. விஜிக்கு தான் குதித்தால் எங்கே அமுதன் தன்னையும் சேர்த்து நீரினுள் அமுக்கிவிடுவான் என்று அவனுக்கு நன்றாக தெரிந்தது.

.....அமுதன் நம்பிக்கை இழந்தான். அவனுக்கு ஏதோ நீரின் மேலே தெரிந்தது. அதில் பெரிய மீசை வாய்த்த ஒருமனிதன் கயிற்றோடு வா வா என அமுதனை நோக்கி அழைத்தான். அமுதன் மரணத்தை நேருக்கு நேராக பார்த்தான். மரண பயத்தில் அவனது இதயம் பிய்த்துக்கொண்டு வெளியே வருவது போல் துடித்தது. உன் வாழ்வு அவ்வளுவு தான் அமுதா என அவன் மனசாட்சி அவனிடம் சொன்னது. அவன் கண் முன்னே அவனது சின்ன வயது தோழி பாத்திமா, அம்மாவின் தாலாட்டு ,கணக்கு ஆசிரியர் மஞ்சுநாதன் , அப்பா, அவனது கல்லூரி தோழி, காதல் சொல்லா காதலி , அண்ணன்கள் , தோழன்கள் என அனைவரும் அவனது கண் முன்னே வந்து போனார்கள். தனது கையின் மேலே யாரோ ஏறி நிற்பது போல அவனுக்கு தோன்றியது. கை அவனிடம் " என்னை வெட்டி எறிந்துவிடு.. என்னால் வலி தாங்க முடியவில்லை" என கெஞ்சியது. கால்கள் நீரின் இழுவையில் வளைந்து அவனது உடலையும் சேர்த்து இழுத்தது.அமுதானால் முடியவில்லை. தனது வாழ்வு முடிந்ததென தெரிந்து கொண்டான். அவன் வானது " அம்மா அம்மா அம்ம்மா .... " என முனகியது. நண்பர்கள் எவனும் அருகே வரவில்லை.அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அமுதன் கையினை விட துணிந்தான். "போதும்மா நீ தந்த வாழ்வு.. மீண்டும் பிரப்பெனெனில் அது உன் வயிற்றிலே " என அம்மா வை நினைத்துக்கொண்டான். அவனையறியாமல் கண்ணீர் எட்டிபார்த்து.கண்களை மெதுவாக மூடத்தொடங்கினான் அமுதன். ஆனது கண்ணீர் மெல்ல உருண்டு வந்து தண்ணீரின் மேற்பரப்பை தொட்டது.


000000000000000000000000000


.........................அமுதன் நம்பிக்கை இழந்தான். அவனது விழிகள் மெல்ல மூட ஆரம்பித்தன. அவனது அம்மாவை நினைத்து கண்ணீர் கொட்டியது. கைகளை விடதுணிந்த நேரம் அவனுக்கு ஓர் குரல் கேட்டது.

""""""அமுதா... நீ இறக்கமாட்டாய்... கையை விட்டுவிடாதே..""""

அசரீரி மீது அவனுக்கு நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை ஆனால் அன்று அவனதை நம்பினான். சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தான் கோபியும் விகியும் மட்டுமே பேயரைந்ததைப்போல் இருந்தனர். கொஞ்சம் அவனுக்கு தைரியம் பிறந்தது . மூடிய கண்களை நன்றாக திறந்து தேடினான். ஒன்றும் புலப்படவில்லை.
மீண்டும் அதே குரல் கேட்டது. இந்தமுறை அது அவனை சிந்திக்க விடாமல் தொடர்ந்து பேசியது.

""""""""""""""அமுதா.. உன் அம்மா எங்கே.. அவள் புன்னகையை நினைத்துக்கொள்..வேறெதையும் கவனத்தில் கொல்லாதே...நான் யாரென்பதையும் யோசிக்காதே...உன் கையை பார்.. இப்போது அந்த துளை நன்கு அகலமாக உன் கைக்கு ஏற்றவாறு மாறும்.. இனி உன் கை சிறிது கூட வலிக்காது..மற்றொரு கையினை எடுத்து நீந்த முயற்சி செய்.. கவனத்தை சிதறவிடாதே. அனைத்தையும் உன்னால் சாதிக்க முடியும்.. உனக்கு நேரே தெரியும் நீரோட்டத்தை பார்.. மெல்ல வளைந்து வளைந்து ஓடும் ஆற்றினை நினை. ஆகா என்ன அழகு உன் தேவதை.. அவளது கள்ளசிரிப்பு.. அவளை முதன் முதலில் கண்டபோது என்ன நினைத்தாய்.. அவள் விழியின் தாக்கம் எப்படி இருந்தது. வா மெல்ல மெல்ல முன்னேறி நீந்தி வா.."""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

இப்படி அந்த குரலுக்கு குழந்தை போல் தலையாட்டி அதனை உற்று கேட்டுக்கொண்டிருந்தான்..இவ்வாறாக இரண்டு நிமிடம் கரைந்தது. நீரின் ஓட்டம் மாறியது.. பின்னே இழுத்தவர் விடுப்பு எடுத்துக்கொண்டது போல அமுதனின் உடல் முன்னோக்கி தள்ளப்பட்டது. ஆனாலும் அமுதானால் நீந்த முடியவில்லை புதிதாய் நீச்சல் பழகுபவர் போல கையை தப் தப் என நீரின் மீது அடித்துக்கொண்டே நீரின் ஓட்டத்தில் சென்றான். அவனது கால்கள் தரையை தொட ஏங்கின. எப்படியோ அவனை ஆழமில்லா பகுதியில் கொண்டு சென்று தள்ளி விட்டு தண்ணீர் அதன் பயணத்தை தொடர்ந்தது. அமுதனின் கால்கள் தரையை தொட்டவுடன் அப்படியே கரையில் கை வைத்து சாய்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.

ஒன்று

இரண்டு

இரண்டு நிமிடத்திற்கு பிறகு கண்களை விழித்தான். பெரு மூச்சு இன்னும் நிற்காமல் மூச்சு வாங்கியது.

""மச்சான் ரொம்ப பயந்துட்டேன் டா... அவர்மட்டும் இல்லைனா.."" என கோபி சொல்லி முடிப்பதற்குள்
அமுதன் திரும்பி யாரையோ பார்த்து கரையேறி வேகமாய் மறு கரைக்கு சைபர் ஐ தாண்டி ஓடினான்..அங்கே ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் போய்க்கொண்டிருந்தார்.

""ஐயா....""

அவர் திரும்பினார். அவனது பள்ளிகூட தமிழ் ஐயா நின்றிருந்தார்.
இன்றும் அவரிடம் புன்னகை மட்டும் பதிலாக வந்தது.

"நன்றி ஐயா... நானே உங்கள வந்து பாக்கணும் நு நெனைச்சேன்.."

"எதுக்குப்பா " என வினவினார்.

அமுதான் விடுதியில் நடனத்தினை முழுவதும் கூறினான்.

"இப்பவும் பயப்படுறியா ?"

இல்லை என்பது போல் தலையை மட்டும் ஆட்டினான்.

"எங்கே.. மீண்டும் அந்த நீரில் போய் குதி..'" என்றார்.

அமுதன் அருகில் வேகமாய் சென்றான். நீரினை கண்டதும் அவனது கால்கள் நடுங்கின, கைகள் பயங்கரமாக வலிக்கதொடங்கின. திரும்பி அவரை பார்த்தான்.

சிரிப்புடன்.."பயம் உடனே போகாதுப்பா.. போகவும் கூடாது. அதுவும் உயிர் பயம் எப்பவும் இருக்கணும்.. அப்பத்தான் இந்த வாழ்கை நிலையில்லை என்பதை நீ புரிஞ்சுக்குவ. எதையும் முறையா கத்துக்கணும் னு நெனைப்ப.. ஆனாலும் அப்பப்ப நீ அந்த பயம் கூட விளையாடி பாக்கணும் அது உன் வீரத்தை செம்மையாக்கும். தப்பு செய்ய கூடாதுங்கற பயம் என்னைக்கும் உன் மனசுல இருக்கணும்.. அது எந்த விசயமா கூட இருக்கலாம்.கெட்டது செய்ய பயப்படனும் நல்லது செய்ய எவனுக்கும் பயப்பட கூடாது.
இதுக்கு தான் அன்னைக்கே திருக்குரள மனப்பாடம் பண்ணாத வாழ்கைல நெறியா எடுத்துக்கோ னு சொன்னேன்.!!"

இப்போது அவனுக்கு புரிந்தது. அவர் முன்னாடி ஒரு தெளிவு பிறந்தவனை போல நின்றான்.

" யாரும் நம்மை கேள்வி கேக்காத வச்சுக்க.. அந்த பயம் தான் நீ பண்ற ஒவ்வொரு சின்ன வேலையையும் சிறப்பா மாத்தும்.இத எல்லாரும் தொழில் பக்தி னு சொல்வாங்க.. பயம் இருந்தா நீ வழக்கை ல ஜெயிச்சுடுவ.." மனமுருக சொல்லிவிட்டு தன பாதையில் பயணிக்க தொடங்கினார்.

சற்று நேரம் அவரையே பார்த்துக்கொண்டு நின்றான் அமுதன்.

"""அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்...........................................குறள்-428""


........................................................................பயம் - முற்றிற்று .....................................................................


பின்குறிப்பு:

எனது கதையினை முழுதும் பொறுமையுடன் படித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனர்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் என்னை செம்மை படுத்த உதவும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நன்றிகளுடன் கிருஷ்ணா.

எழுதியவர் : கிருஷ்ணா (5-Apr-15, 3:16 pm)
Tanglish : bayam
பார்வை : 1907

மேலே