கடைசி தலைமுறை நாம் தான்

*ஒளியும் ஒலியும் பார்த்த கடைசி தலைமுறை நாம்தான்.
*செல்போனில் பட்டனை பார்த்த கடைசி தலைமுறை
நாமாகத்தான் இருக்கும்
*மஞ்சள் பூசிய பெண்கள் பார்த்த கடைசி தலைமுறை நாம்தான்...!!
*மயில் இறகை புத்தகத்துக்குள்ள வச்சி அது குட்டி
போடும்னு நம்பின கடைசி தலைமுறை நாமாகத்தான் இருக்கும்.
*தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும்,தந்திக்கே மரணம்
வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நாமாகத்தான் இருக்கும்
*கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு
உண்ட கடைசி தலைமுறை நாமாகத்தான் இருக்கும்.
*காதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி,பூஜை
போட்டு பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்
பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நாமாகத்தான் இருக்கும்.
*நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நாம் தான்.
*நொண்டி,கிட்டிப்புள்,பம்பரம்,கண்ணாம்பூச்சி,கோழி என
பல விதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம் தான்.
*1,5,10,20,25,50 சதம் நாணயங்களை பார்த்த கடைசி தலைமுறை நாம் தான்.
*மண் வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை நாம் தான்.
*இதையெல்லாம் படிக்கும் போது சிறுதுளி கண்ணில் எட்டிப்
பார்ப்பதும்,அதை ரசிக்கும் கடைசி தலைமுறை நாம் தான்.
*கண்ணாம்பூச்சி,கபடி,பல்லாங்குழி போன்ற மூளைக்கும்,
உடலுக்கும் பயிற்சி அளிக்க கூடிய நண்பர்களுடன் இணைந்து
விளையாடிய கடைசி தலைமுறையும் நாம் தான்.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (5-Apr-15, 3:03 pm)
பார்வை : 412

மேலே